ETV Bharat / state

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: 2 இளைஞர்களுக்கு தலா 20 ஆண்டுகள் ஜெயில்!

சென்னையில் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 5 மற்றும் 7 வயதுடைய சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இரு வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

author img

By

Published : Jan 25, 2023, 6:58 AM IST

சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் 5 வயது சிறுமியை, எதிர்வீட்டிலிருந்த 29 வயது இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதேபோல கடந்த 2020 ஆம் ஆண்டு தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் 7 வயது சிறுமியை 27 வயது இளைஞர் ஒருவர் 20 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சென்னை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட 2 வழக்குகளில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் அந்தந்த குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இரு இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளும் சென்னை போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், 5 வயது சிறுமி பாதிக்கப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 7 வயது சிறுமி பாதிக்கப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Oscars 2023: ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.