ETV Bharat / state

9.23 லட்சம் குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் தடுப்பூசி - அமைச்சர் தகவல் - நியூமோகோக்கல் தடுப்பூசி

தமிழ்நாட்டில் 5 வயதிற்குட்பட்ட 9 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

minister ma subramanian
அமைச்சர் மா.சு தகவல்
author img

By

Published : Jul 24, 2021, 1:56 PM IST

Updated : Jul 24, 2021, 3:03 PM IST

சென்னை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நியூமோகோக்கல் நிமோனியா, மூளைக் காய்ச்சல் நோய்களிலிருந்து குழந்தைகளை காப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று (ஜூலை22) தொடங்கியது.

இதைத் தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களினால் 12 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இறங்கின்றனர்".

குழந்தைகளின் நலன் பேண தடுப்பூசி

"தமிழ்நாட்டில் உயிரிழப்புகளைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இன்று முதல் தினந்தோறும் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி செலுத்தப்படும். தனியார் மருத்துவமனைகளை பொறுத்தவரை மூன்று தவணையாக தடுப்பூசி செலுத்துவதற்கு 12 ஆயிரம் வரை செலவாகும்".

"அரசின் சார்பில் தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படும். எல்லா மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பிளீச்சிங் பவுடர் உண்டு, உடல் நலிவுற்ற 5 வயது பெண் குழந்தை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்".

பிளீச்சிங் பவுடர் உண்ட குழந்தையின் நிலை

"குழந்தையின் குடல் சுருங்கி உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், குழந்தையின் வயிற்றில் துளையிட்டு மருத்துவர்கள் உணவு வழங்குகின்றனர். சுமார் 6 கிலோவில் இருந்த குழந்தையின் தற்போது 8 கிலோ அளவிற்கு உயர்ந்துள்ளது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக குழந்தை விரைவில் குணமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் குழந்தையின் பெற்றோர் தங்க அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது".

குழந்தைகளுக்கு தடுப்பூசி இலக்கு

"5 வயதிற்குட்பட்ட 9 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி போடப்படவுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு போட வேண்டிய தடுப்பூசியை ஏன் கடந்த ஆட்சி செயல்படுத்தவில்லை என தெரியவில்லை. தற்போது 70 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்புள்ளன. முதல் தவணை உள்ள குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் போடப்படும்".

"தசை சிதைவு நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் மருத்துவமனை உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த நோயினால் 2 ஆயிரம் குழந்தைகளும், சென்னையில் 200 குழந்தைகளும் உள்ளனர். சென்னையில் உள்ள மருத்துவமனையில் இது தொடர்பாக ஆய்வு செய்யப்படும். தேவைப்பட்டால் அந்த மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும்.மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். அதற்கான அடிப்படை கட்டமைப்பினை துறை மேற்கொண்டு வருகிறது"இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி: முதல் டோஸ் செலுத்திக்கொண்ட காவலர் உயிரிழப்பு!

Last Updated : Jul 24, 2021, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.