ETV Bharat / state

'மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டக் கூடாது'- மருத்துவர் ராமதாஸ்!

சென்னை: இறுதிப் பருவத் தேர்வுகள் விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக ராமதாஸ் அறிக்கை  பாமக  மருத்துவர் ராமதாஸ்  central government semester exam  pmk  college semester exam  dr ramadoss statement clg exam
'மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டக் கூடாது'- மருத்துவர்.ராமதாஸ்
author img

By

Published : Jul 12, 2020, 2:24 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயர் கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால், பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்து செய்வதில் மாநிலங்கள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்று கூறும் மத்திய அரசு, அதன் அறிவுரையை அதுவே கடைப்பிடிக்கவில்லை.

உயர் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதை மத்திய அரசு மதித்திருந்தால், பல்கலைக்கழகத் தேர்வுகளை அனைத்து மாநிலங்களும் செப்டம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு முன்பாக, மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்; ஆனால், அதுதொடர்பாக எந்த மாநில அரசுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தவில்லை.

பொதுப்பட்டியலில் உள்ள ஒரு பொருள் குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தாது; ஆனால், மத்திய அரசின் தன்னிச்சையான முடிவுக்கு மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டு, மாநிலங்களை எந்தவிதமான அதிகாரங்களும் இல்லாத அலங்கரிக்கப் பட்ட மாநகராட்சிகளாக மாற்ற முயல்வது ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி தத்துவத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது மாநில அரசுகளின் ஆசை அல்ல. மாறாக சூழல் தான் இத்தகைய முடிவை எடுக்கக் காரணமாக உள்ளது. இதை உணர்ந்து கொண்டு, இறுதிப் பருவத் தேர்வுகள் விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'பதவி வெறியால் தூங்காத ஸ்டாலின் பித்து பிடித்து அலைகிறார்' - அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.