ETV Bharat / state

பிரதமர் மோடி சென்னை வருகை - கட்டுப்பாடுகள் விதித்த சென்னை காவல் ஆணையர் - chess olympiad

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வுக்கு பிரதமர் மோடி வரவுள்ளதை முன்னிட்டு, சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி சென்னை வருகை - கட்டுப்பாடுகள் விதித்த சென்னை காவல் ஆணையர்

author img

By

Published : Jul 25, 2022, 9:30 PM IST

சென்னை: 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 2022, வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தங்குவதற்காக சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 37 நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் போட்டியில் கலந்துகொள்ள ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளை பயன்படுத்தி மாமல்லபுரம் செல்லத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்த சாலைகளில் முழுமையான பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே 4,000 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பயண விவரம்: மேலும், இப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி தனி விமானத்தில், அகமதாபாத்தில் இருந்து சென்னை வருகிறார்.

பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அடையாறு விமான தளம் செல்கிறார். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக மாலை ஆறு மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அதன் பின்னர் 7.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராஜ் பவனுக்குச் சென்று, அன்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.

பின்னர் மறுநாள் காலை 10 மணியளவில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அவர், நிகழ்ச்சிக்குப் பின் சுமார் 11.30 மணியளவில் மீண்டும் சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து 12 மணியளவில் மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு: இதனால் சென்னை விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அடையார் ஐ.என்.எஸ் ஆகிய இடங்களைச் சுற்றி ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்படும் எனவும், சுமார் 6,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நிகழ்ச்சி நடக்கும் நேரு உள்விளையாட்ட்டு அரங்கில், 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநகருக்குள் பிரதமர் மோடி செல்லும் வழித்தடங்களில் 100 மீட்டர் இடைவெளி விட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். அந்த வழித்தடங்களில் உள்ள உயரமான கட்டிடங்கள் ஆகியவற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் அந்த இரண்டு நாட்களும் சென்னை மாநகருக்குள் ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்: ஒத்திகை போட்டியில் 1,414 வீரர்கள் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.