ETV Bharat / state

ஏழைகளுக்காக வாழ்வையே அர்ப்பணித்தவர் எம்ஜிஆர் - மோடி புகழாரம் - எட்டு புதிய ரயில் திட்டங்கள்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஏழை மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

PM Modi praise MGR for dedicating life to the poor

author img

By

Published : Jan 17, 2021, 2:58 PM IST

Updated : Jan 17, 2021, 5:18 PM IST

சென்னை: இந்தியாவின் ஒற்றுமை சின்னம் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரமாண்ட சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியா சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்கு நாடு முழுவதிலும் இருந்து எட்டு புதிய ரயில் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பச்சை கொடியசைத்து நான்கு புதிய ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் சென்னையிலிருந்து கேவாடியா செல்லக்கூடிய புதிய ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் பேசிய அவர், " டாக்டர் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து குஜராத் கேவாடியா ரயில் நிலையம்வரை இந்த புதிய ரயில் இயக்கப்படுகிறது. முக்கியமாக எம்ஜிஆரின் பிறந்த நாளான இன்று இந்தத் திட்டம் தொடங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

எம்ஜிஆர் ஏழை மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டார். இந்த ரயில் இந்திய சுற்றுலாத் தளத்தில் முக்கிய அங்கம் வகிக்கும். அதுமட்டுமின்றி சுற்றுலா தளத்தில் வாழக்கூடிய பழங்குடியினரின் வாழ்வை மேம்படுத்தும் விதமாகவும் இந்த திட்டம் அமையும்" என்றார்.

சிறப்பு ரயில் தொடக்கம்

இந்த நிகழ்ச்சியில், வாரணாசி-கேவாடியா எக்ஸ்பிரஸ், தாதர்-கேவாடியா எக்ஸ்பிரஸ், அஹமதாபாத்-கேவாடியா ஜன் ஷதாப்தி எக்ஸ்பிரஸ், ஹஸ்ரத் நிஜாமுதின்-கேவாடியா எக்ஸ்பிரஸ், ரெவா-கேவாடியா எக்ஸ்பிரஸ், சென்னை-கேவாடியா எக்ஸ்பிரஸ், பிரதாப் நகர்-கேவாடியா MEMU ரயில் மற்றும் கேவாடியா-பிரதாப் நகர் MEMU ரயில்கள் தொடங்கிவைக்கப்பட்டன.

Last Updated : Jan 17, 2021, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.