சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 4 ஆயிரத்து 895 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 1,777 மாணவர்கள் மற்றும் 2,888 மாணவியர்கள் என மொத்தம் 4,665 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சதவிகிதம் அடிப்படையில் 95.30 ஆகும்.
இது கடந்த ஆண்டை விட 1.78 விழுக்காடு கூடுதலாக கிடைத்த தேர்ச்சி ஆகும். மேலும் 500 மதிப்பெண்களுக்கு மேல் 20 விழுக்காடு மாணவ, மாணவியர்களும், 450 மதிப்பெண்களுக்கு அதிகமாக 108 மாணவ, மாணவியர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல், 306 மாணவ - மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நெசப்பாக்கம் மேல்நிலைப்பள்ளி, இலியட்ஸ் மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார்பேட்டை மற்றும் சி.ஐ.டி நகர் மேல்நிலைப்பள்ளி என நான்கு மேல்நிலைப்பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது.
தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் இணை ஆணையர் சங்கர்லால் குமாவத் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.