சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் 'யுவர் ப்ளாட்பார்ம்' என்று மாதாந்திர இதழ் வெளியீட்டு விழா சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த இதழின் முதல் பிரதியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா மற்றும் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் ஆகியோர் வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து சென்னை, பெங்களூரு செல்லும் டபுள் டெக்கர் ரயிலில் பயணித்த பயணிகளுக்கு இந்த இதழ் விநியோகிக்கப்பட்டது.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா, "இந்திய ரயில்வேயின் பாரம்பரியம், கலாச்சாரம் பெருமையை தெரிந்துகொள்ளும் விதமாக 'யுவர் பிளாட்பார்ம்' என்ற மாதந்திர இதழ் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த இதழ் ராஜ்தானி, சதாப்தி, டபுள் டக்ககர் போன்ற முக்கிய ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.
வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, காட்பாடி, திருவள்ளூர், அரக்கோணம், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை ரூ.10 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படும். பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவே டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை கொண்டாட்டம்