ETV Bharat / state

தமிழ்நாட்டில் சூடு பிடிக்கும் கிராம சபை மீட்பு வாரம் - pettion for gramasaba meet

ரத்து செய்யப்பட்ட கிராமசபைக் கூட்டங்களை உடனே நடத்த வலியுறுத்தி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு இணையம் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

pettion for gramasaba meet through Village council recover week

author img

By

Published : Oct 16, 2020, 3:26 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசால் ரத்து செய்யப்பட்ட கிராமசபைக் கூட்டங்களை உடனடியாக மீண்டும் நடத்த வலியுறுத்தி அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் இணைந்து கிராம சபை மீட்பு வாரத்தை அக்டோபர் 12 முதல் 17ஆம் தேதி வரை நடத்தி வருகின்றன.

இதில் கிராம சபைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல், தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதுதல், முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் முறையிடல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, நேற்று (செப். 16) முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இணையவழி மற்றும் பதிவு தபால் மூலம் கிராம சபை கூட்டங்கள் உடனே நடத்த வேண்டும் என மனு அனுப்பப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகள் மற்றும் மரக்காணம் ஒன்றியத்தில் அனுமந்தை, கோட்டிக்குப்பம் ஊராட்சி உட்பட 56 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் உடனே நடத்த வேண்டும் என புகார் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், கோவை, சேலம், விருதுநகர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் கிராம சபைக் கூட்டங்கள் உடனே நடத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தலைமைச் செயலகத்தில் உள்ள முதலைமச்சரின் தனிப்பிரிவிற்கு நேரில் சென்று கிராம சபைக் கூட்டங்கள் உடனே நடத்த வேண்டும் எனவும் மனு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.