ETV Bharat / state

சி.வி. சண்முகம் குறித்த பொய் தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி மனு! - chennai news in tamil

சி.வி. சண்முகம் ஒரு சமுதாயம் குறித்து சொல்லாத ஒரு விஷயம் அவர் சொன்னதாக சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதாகவும், அதை முடக்கவேண்டும் எனவும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் காவல் துறை ஆணையரிடம் இன்று புகார் மனு அளித்தார்.

law minister c v shanmugam
சி.வி. சண்முகம் குறித்த பொய்த்தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி மனு
author img

By

Published : Feb 7, 2021, 8:46 PM IST

சென்னை: சி.வி. சண்முகம் ஒரு சமுதாயம் குறித்து சொல்லாத ஒரு விஷயம் அவர் சொன்னதாக சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதாகவும், அதை முடக்கவேண்டும் எனவும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாபு முருகவேல் காவல்துறை ஆணையரிடம் இன்று புகார் மனு அளித்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஒரு சமுதாயம் குறித்து சொல்லாத ஒரு விஷயம் அவர் சொன்னதாக சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அரசியல் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க வழி இல்லாதவர்கள், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பொய்யான தகவலைப் பரப்பிவருகின்றனர்.

எந்த ஒரு இனத்தையோ மதத்தையோ புண்படுத்தும் நோக்கத்தில் அதிமுக செயல்படவில்லை. தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் எண்ணத்தோடு இது பகிரப்படுகிறது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும், மேலும், அதனை பரப்பியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதுபோல பொய்களைப் பரப்ப பலர் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை காவல் துறை தடுக்க வேண்டும். புகார் மனுவை காவல் துறையிடம் வழங்கியுள்ளோம். அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: அரசியலுக்காக வீட்டை முற்றுக்கையிடுகின்றனர்: அமைச்சர் தங்கமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.