ETV Bharat / state

சென்னையில் மழைநீர் தேங்குவது குறித்த அறிக்கை: ஸ்டாலினிடம் நாளை தாக்கல்

சென்னையின் முக்கியப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுப்பது குறித்த ஐஏஎஸ் அலுவலர் குழுவின் அறிக்கை நாளை (டிசம்பர் 31) முதலமைச்சர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

சாலையில் தேங்கிய மழை நீர்
சாலையில் தேங்கிய மழை நீர்
author img

By

Published : Dec 30, 2021, 2:02 PM IST

சென்னை: வடகிழக்குப் பருவ மழையின்போது சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போலத் தேங்குகிறது. மேலும், மழைநீர் வடிகால் வாய்க்கால் முறையாகத் தூர்வாரப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் திருப்புகழ் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைத்து நிரந்தரத் தீர்வு காண முடிவுசெய்தது. இந்தக் குழுவில் துறை வல்லுநர்கள் கலந்து ஆலோசித்து தனது முழுமையான அறிக்கையை நாளை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் தாக்கல் செய்யவுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 200 செமீ மழை பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்த நிலையில் 2015ஆம் ஆண்டைப் போலவே பல பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆங்கில புத்தாண்டு - சென்னையில் 10000 போலீசார் பாதுகாப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.