ETV Bharat / state

கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளுக்கு தடை விதிக்க கோரி மனு! - தமிழக கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்க மனு

தமிழ்நாடு பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளுக்கு தடை விதிக்க கோரி மனு

author img

By

Published : Apr 23, 2022, 8:07 PM IST

சென்னை: இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், பள்ளி மாணவர்களிடம் வேறுபாட்டைக் களையும் நோக்கில் கடந்த 1960ஆம் ஆண்டில் மாணவர்களுக்கான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

இதுசம்பந்தமான விதிகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை எனவும், ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை மாணவ - மாணவிகள் அணிந்து வருவதாகவும், இது சீருடை விதிகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், மதத்தின் பெயரால் சமத்துவமின்மையை ஏற்படுத்துவதை தடுக்கவும், கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை போல தமிழகத்தில் ஏற்படாமல் தடுக்கவும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாதாக கூறியுள்ளார்.

நாகரிக சமுதாயமான இந்திய சமுதாயத்தில் மதத்தின் பெயரால் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்பதால், தமிழகத்தில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகள் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கும்படி, பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை (ஏப்.25) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக முகவர் வெளியேற்றம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.