ETV Bharat / state

சாதிகளுக்கு இடையேயான உறவைப் பேசுவது என் தனித்தன்மை - பெருமாள் முருகன் - மார்க்கியமும் பெரியாரியமும்

சென்னை மாநிலக் கல்லூரி கருத்தரங்கில் உரையாற்ற வந்திருந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தனது படைப்புகளின் தனித்தன்மை குறித்து பகிர்ந்துகொண்டார்.

பெருமாள் முருகன்
பெருமாள் முருகன்
author img

By

Published : Mar 15, 2023, 6:12 PM IST

பெருமாள் முருகன் பிரத்யேக பேட்டி

சென்னை: சர்வதேச புக்கர் பரிசிற்கான தேர்வுப் பட்டியலில் தனது பூக்குழியின் ஆங்கில மொழியாக்கம் இடம் பெற்றிருக்கும் நிலையில், தனது படைப்புகளின் தனித்தன்மை அவை சாதி குறித்து உரையாடுவது, சாதிகளுக்கு இடையே உள்ள உறவை மையப்படுத்தியது என்கிறார் சாகித்ய அக்காதமி விருது பெற்ற எழுத்தாளரும் சிறந்த தமிழ் ஆய்வாளருமான பெருமாள் முருகன்.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று கூறுகிறார் ஈடிவி பாரத்திற்கு அளித்த நேர்கணலில். மார்க்சியமும்-பெரியாரியமும் சாதியத்தை, சாதிய கட்டுமானத்தைப் புரிந்துகொள்ள உதவியது. எழுதத் தூண்டியது, வங்க எழுத்தாளர் அதின் பந்தோபாத்யாயா-வின் நீலகண்ட பறவையைத் தேடி என்ற நாவல்தான்.

தமிழில், கிராமங்களைப் பற்றிய படைப்புகள் பெரும்பாலும் ஒரே ஒரு சாதியை மையாமாக வைத்தோ அல்லது ஒரு குடும்பத்தை வைத்தோ எழுதப்பட்டவையாக உள்ளன. அந்த நாவல், அவ்வாறு இல்லாமல் ஒரு ஊரையே முழுமையாக கண்முன் கொண்டு வருகிறது.

தமிழில் அவ்வாறு படைக்கவேண்டும் என்றே எழுதத் தொடங்கினேன். ஒரு எழுத்தாளன், மற்றவர்களைப் போல அல்லாமல் கூடுதல் கவனத்துடன் சமூக முரண்களை அனுகவேண்டும். நாம் வாழும் காலத்தில் நிகழும் மாற்றங்களை, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, நான் கற்றுக்கொண்ட மார்க்சியமும் பெரியாரியமும் பெரிதும் துணையாக இருந்தது என்கிறார்.

கொங்கு மண்டல வாழ்வை அதன் நுட்பங்களுடன் விவரிக்கும் பெருமாள் முருகன், அழுத்தமான பெண் பாத்திரங்களைப் படைத்துள்ளார். காரணம், அங்குள்ள பெண்கள் கடின உழைப்பாளிகள், வீட்டில் முடங்கிக் கிடப்பவர்கள் அல்ல.

ஆண்கள் துணை இன்றி விவசாயத்திலும் பிற பணிகளிலும் செயல்படுபவர்கள். முடிவு என்பது முடிவல்ல, அது ஒரு தொடக்கம் என்ற நிலையிலேயே உங்களது படைப்புகள், பூக்குழி அல்லது மாதொருபாகன், இருப்பதற்கு வாசகர் விருப்பம் என்பதே அவரது விடையாக உள்ளது. நான் வாசகர்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறேன் என்கிறார்.

இதையும் படிங்க: ‘வனத்தில் நடப்பதே எனக்கு கிரிவலம்’ - தபால்காரர் சிவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.