ETV Bharat / state

'பயங்கரவாத எண்ணம் இல்லை' - என்ஐஏ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டவர் பேட்டி! - தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை

சென்னையில் என்ஐஏ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட நபர், தனக்கு எந்த அமைப்புடனும் தொடர்பு இல்லை என்றும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை என்றும் பேட்டியளித்துள்ளார்.

என்ஐஏ
என்ஐஏ
author img

By

Published : Feb 15, 2023, 4:47 PM IST

என்ஐஏ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டவர் பேட்டி

சென்னை: கொடுங்கையூர் தென்றல் நகர் 8வது தெருவில் வசித்து வருபவர், முகமது நியமத்துல்லாஹ். இவரது இல்லத்தில் 3 மணி நேரம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திச்சென்றுள்ளனர். சோதனைக்குப் பிறகு முகமது நியமித்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு பலமுறை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மதம் சார்ந்த பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடும் என்னிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்பாக எந்தவித அமைப்பையும் சாராமல் தனியாக மதப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுவதால் அது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். அவ்வாறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது பல்வேறு நபர்களை சந்தித்துள்ளேன். செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டுள்ளேன்.

அவ்வாறு என் செல்போன் எண்ணை வாங்கிய நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பில் இருந்தார்களா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால், அதன் தொடர்ச்சியாகவே இது போன்ற விசாரணை நடத்தப்படுகிறது என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், நான் எந்தவித தடை செய்யப்பட்ட அமைப்புடனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பில் இல்லை.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. எனவே, எத்தனை முறை சோதனை நடத்தினாலும் ஒத்துழைப்புத் தருவேன். இன்று ஏழு அதிகாரிகள் 3 மணி நேரம் சோதனை நடத்திச் சென்றுள்ளனர். எனது செல்போனை மட்டும் வாங்கிச் சென்றுள்ளனர். என்னிடமிருந்து வேறு எந்த வித ஆவணத்தையும் பறிமுதல் செய்யவில்லை என்ற ஆவணத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்று விட்டனர்” என்றார்.

இதையும் படிங்க: கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக 60 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.