ETV Bharat / state

சீல் வைக்கப்பட்ட புரதான கட்டடங்களின் சீல்களை அகற்ற அனுமதி - மாநில தகவல் ஆணையர் - சென்னை செய்திகள்

பழமையான கட்டடங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி கட்டுமான பணிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

Etv Bharatசீல்வைக்கப்பட்ட புரதான கட்டடங்களின்  சீல்களை அகற்ற அனுமதி

author img

By

Published : Dec 8, 2022, 11:07 AM IST

சென்னை: பழமையான புராதான கட்டடங்களுக்குக் கட்டட அனுமதி வழங்குவதற்கான சட்ட நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் எனவும், சீல் வைக்கப்படும் கட்டடங்களின் சீலை அகற்றுவதற்கும், கட்டிடத்தில் பழுது பார்க்க அனுமதிக்கும் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் முன்னிலையில் நடைபெற்றது. அந்த வழக்கின் தீர்ப்பில் மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் கூறியுள்ளதாவது,”பழைய கதவு எண்.99, பிடாரியார் கோவில் தெரு, சென்னை -108 இந்த எண் கொண்ட புதிய கட்டடத்திற்கு எத்தனை அடுக்கு மாடி கட்டம் கட்ட மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது, அதற்கான விபரம் இவைகள் போன்ற 5 இனங்களில் தகவல் கோரியுள்ளார்.

பழமையான பகுதிகள்: சென்னை என்பது புராதனமான நகரமாகும். சிறு சிறு கிராமங்களாக இருந்து தற்போது ஒன்றிணைந்து பரப்பளவிலும் வளர்ச்சியடைந்து தற்போது 200 வார்டுகளுடன் சென்னை பெருநகரமாக உருவாகியுள்ளது. இவற்றுள் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் -5 சார்ந்த பகுதிகளாகச் சென்னை சென்ட்ரல், பாரிமுனை, ராயபுரம் ஆகிய பகுதிகள் மிகப் பழமையான பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

அப்பகுதிகளில் சென்னகேசவ பெருமாள் கோவில், கந்தகோட்டம் கந்தசாமி திருக்கோவில், கச்சாலீஸ்வரர் கோவில், காளிகாம்பாள் திருக்கோவில், ஆண்டர்சன் தேவாலயம், என்.எஸ்.கே.போஸ் சாலை, பாரிமுனை, சென்னை ஆகியவை உள்ளடங்கும். இவைகள் கடந்த 10 மற்றும் 17-ம் நூற்றாண்டிற்கு முன்பு கட்டப்பட்டுள்ள சிறப்பு மிக்க திருத்தலங்கள் ஆகும்.

புராதான கட்டடங்கள்: சென்னை பாரிமுனை மற்றும் சென்ட்ரல் ஆகிய பகுதிகளிலும் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள புராதானமான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் 1825 - 1858ல் வாழ்ந்த இல்லம், சென்னை, ஏழுகிணறு, வீரசாமி பிள்ளை தெரு ஆகிய முக்கிய கட்டடங்களை உள்ளடக்கியதாகும். அதேபோல அங்கு நூற்றுக்கணக்கான பழமை வாய்ந்த கட்டடங்களும், வீடுகளும் இருக்கின்றன.

கட்டட அனுமதி நடைமுறைகள்: நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. அதற்கு முன்பாகவே நகரமைப்புகள் தொடர்பான சட்டங்கள் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக மட்டுமே கட்டடம் கட்டுவதற்கான அனுமதி சம்பந்தமாக நடைமுறைகள் (Building Rules ) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மட்டும் அல்லாது பிற பழமையான நகரங்களிலும் வீடுகள் மிகப் பெரியதாகவும் தெருக்கள் குறுகியதாகவும் அமைந்துள்ளன. அவற்றைச் சென்னை பாரிமுனை ( Parrys ), மதுரை, திருச்சிராப்பள்ளி போன்ற ஊர்களில் காணலாம். (எ.கா:காரைக்குடி) தேவகோட்டை போன்ற செட்டிநாடு பகுதிகளில் 1 ஏக்கர் அளவில் வீடுகளும், இந்த வீடுகளுக்கு எதிரிலும் அடுத்தும் 10 அடிக்கும் குறைவாகவே தெருக்கள் இருக்கும்.

இந்த வகையான அமைப்பானது வீட்டின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நம் முன்னோர்களால் அமைக்கப்பட்டதாகும். அதே போன்றுதான் சென்னையில் தற்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாகச் செயல்படும் புனித ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ள கட்டட அமைப்புகளிலும் பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டட அமைப்புகள் உள்ளதைக் காணலாம்.

அலுவலகங்களில் ஆவணங்கள்: இது போன்ற வரலாறுகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் தற்சமயம் நடைமுறையில் பின்பற்றப்படும் சட்டதிட்டங்கள் கொண்டு பழமையான கட்டடங்களுக்கான கட்டட அனுமதி குறித்து கேள்வி கேட்டும், வீட்டின் உரிமையாளர்களைத் தொந்தரவு செய்வதும் தகவல்பெறும் உரிமைச்சட்ட மனுக்களின் மீதான விசாரணையின் போது தெரியவருகின்றது.

இதனை போன்ற கட்டட அனுமதி நகல், பத்திரம், வீட்டு வரி ரசீது போன்ற ஆவணங்கள் கட்டட உரிமையாளர்களிடம் ஒரு நகல் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஒரு நகலும் இருக்க வேண்டும். இவ்வகையான ஆவணங்கள் அரசால் தான் வழங்கப்பட்டிருக்கும் என்பதாலும், அதனுடைய நகலும் அரசு அமைப்புகளிடம் இருக்க வேண்டியவை ஆகும். ஆனால் வீட்டு உரிமையாளர்களிடம் இவைகள் குறித்து தொந்தரவு செய்வதாக விசாரணையில் தெரிய வருகின்றது.

பாரிமுனை, சென்டரல் பகுதிகள் தான் 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வணிகம் சார்ந்த பகுதிகளாக விளங்கியுள்ளன. தற்போதும் வணிகம் மற்றும் வணிகம் சார்ந்த பகுதிகளாக இப்பகுதிகள் உள்ளன. இவற்றிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் மூலமாகத் தான் மாநகராட்சி உட்பட அரசின் பல அமைப்புகளுக்கும் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால் வணிகம் செய்யும் வணிகர்களை அவர்களின் கட்டடம் சம்பந்தமான பல வழிகளில் துன்புறுத்துவதாகப் பல தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாருக்கு RTI Act 25 - ன் படி , பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. கட்டட வரைபட அனுமதியை அரசு அமைப்புகள் தான் வழங்குகின்றன. அதன் நகல் அனுமதி வழங்கிய அரசு அமைப்புகளிடம் இருக்க வேண்டும். ஆனால் கட்டட உரிமையாளர்களிடம் அனுமதி ஆவணங்கள் கோரும் நடைமுறை சென்னை உட்படத் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பொது அதிகார அமைப்புகளின் நடைமுறையாக உள்ளது.

அரசு தான் பொது மக்களுக்கு அளிக்கும் ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 100 ஆண்டுகளுக்கு முன்பாக பதிவுத் துறையில் பதிவு செய்த ஆவணங்களை பொது மக்கள் தொலைத்து விட்டால் அந்த ஆவணங்களைப் பெறுவதற்கு பதிவுத்துறை மூலம் உரிய வழிவகை எவ்வாறு ஏற்பாடு செய்யப்படுகிறதோ, அது போல ஆவணங்கள் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும்.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பு சுட்டப்பட்ட பழமையான கட்டடங்களுக்குக் கூட கட்டட அனுமதி இருக்கிறதா எனக் கேட்டு தொந்தரவு செய்வது நடைமுறையில் உள்ளது. இருசக்கர வாகனங்கள், (சைக்கிள் ஸ்கூட்டர்) மற்றும் கனரக வாகனங்களான (பஸ், லாரி, வேன்) போன்றவைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு அமைக்கப்பட்ட சென்னையின் பழமையான தெருக்களில் லாரி போன்ற கனகரக வாகனங்கள் செல்வதற்கு இட வசதி இல்லை என்று கூறி கட்டடத்தை இடிக்க வேண்டும் என மனு அளித்து கட்டட உரிமையாளர்களைத் துன்புறுத்துவது நடைமுறையில் இருக்கிறது.

சீல் வைப்பதால் பாதிப்பு: இதே போல் நோட்டீஸ் அனுப்பி Lock and Seal வைக்கும் பொழுது கடையாக இருக்கும்பட்சத்தில் அதன் உள்ளே இருக்கின்ற பொருட்களை எடுப்பதற்கு வணிகருக்கு வாய்ப்பு அளிக்காமல் உடனடியாக மூடும் சூழ்நிலை இருக்கிறது. ஆணையத்தின் விசாரணையின்போது நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் தெரியவந்த விபரங்கள் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது.

திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டில், Lock and Seal வைக்கப்பட்ட நிகழ்வு. குழந்தை பிறந்து நான்கு நாட்களே ஆன நிலையில் இதே வீட்டில் உள்ளவர்களை வெளியேற்றி Lock and Seal வைக்கப்பட்ட நிகழ்வு ஆகியவை நடந்துள்ளன. வணிகர் ஒருவர் அடுத்த நாள் விநியோகம் செய்வதற்காகக் கடையில் வைத்திருந்த பொருட்களை எடுக்க விடாமல் பொருளுடன் சீல் வைத்த நிகழ்வு போன்று நடைமுறையில் தற்போது வரை இதுபோன்று பல பிரச்சனைகள் இருக்கிறது.

இது சம்பந்தமாக முழுமையான ஆய்வு நடத்தவும், சென்னை உட்படப் பழமையான நகராட்சிகள் இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பு அதாவது மாநகராட்சி, நகராட்சி உருவாவதற்கு முன்பு உருவாக்கப்பட்ட தெருக்கள்/கட்டப்பட்டுள்ள வீடுகள் போன்றவற்றிலும் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அரசு உத்தரவு அல்லது நீதிமன்ற உத்தரவுப் படி Lock and Seal திறப்பதற்கு மாநகராட்சி என்றால் ஆணையர் வரை சென்று உத்தரவு பெறுவதில் மிகுந்த கால தாமதம் ஏற்படுகின்றது.

அரசால் உத்தரவு வழங்கப்பட்டால் Lock and Seal செய்வதற்கான அதிகாரத்தை மண்டல அதிகாரிகள் நிலையில் பரவலாக்கலாமா (Delegatlan Of Powers) என்பது குறித்தும், Lock and Seal செய்யப்பட்ட காலகட்டத்தில் அந்த கட்டடத்தில் தீ, மழை நீர்,கழிவு நீர், தண்ணீர் குழாய் உடைப்பு போன்ற அசாதாரண சம்பவங்கள் ஏற்படும் பொழுது அவற்றைக் கட்டட உரிமையாளர் உடனடியாகத் திறந்து சரிசெய்து கொள்ளவோ அல்லது வீட்டின் உரிமையாளர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்ற அறிவுரை வழங்குவது குறித்தும் ஆராய வேண்டும்.

ஆணையத்தின் பரிந்துரை குறித்து ஆராய தங்கள் துறையில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரியை நியமித்து அல்லது வெளியிலிருந்து ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து ஆய்வு செய்து அறிக்கையாக தாங்கள் வைத்துக்கொண்டால் அரசு முடிவு எடுப்பதற்கும் நீதிமன்ற வழக்கிற்கும் அவ்வறிக்கை பயன் உள்ள தகவலாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ரேசன் கார்டில் திருத்தம் செய்யனுமா? - இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.