கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் கோயம்பேடு சிறு, மொத்த வியாபாரிகள் இன்று முதல் கடைகளை அடைக்க வேண்டும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) சந்தை நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
சந்தை அடைக்கப்பட்டால் தங்களின் வியாபாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் என்றும், விவசாயிகள், காய்கறி விற்பனை செய்யும் கடைகள், பொதுமக்கள் இந்த முடிவால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கோயம்பேடு வியாபாரிகள் அலுவலர்களிடம் எடுத்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோயம்பேடு சிறு, மொத்த வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் இன்று தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் முத்துசாமியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து இன்றும், நாளையும் (மே 19,20) மட்டும் கோயம்பேடு அண்ணா மொத்த காய்கறிக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
கோயம்பேடு காய்கறிச் சந்தையில் 1400 மொத்த விற்பனைக் கடைகள் உள்ள நிலையில் அவற்றில் 1200க்கும் மேற்பட்டவை 300 முதல் 150 சதுர அடி பரப்பளவு கொண்ட சிறு மொத்தக் கடைகள்.
கோயம்பேடு வியாபாரிகள் நாளை(மே20) தலைமைச் செயலாளரைச் சந்தித்து, சுழற்சிமுறையில் கடைகளைத் திறக்க அனுமதி பெற உள்ளனர்.
இதையும் படிங்க:விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது - தேமுதிக தலைமைக் கழகம்