ETV Bharat / state

பேரறிவாளன் சிறை நடைமுறைகள் முடிந்து முறைப்படி விடுதலை செய்யப்பட்டார்! - விடுதலை

பேரறிவாளனின் பிணை பத்திரம் ரத்து செய்யப்பட்டு, புழல் மத்திய சிறை 1-ன் தண்டனை பதிவேடுகளில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு இன்று முறைப்படி விடுதலை செய்யப்பட்டார் காவல் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் சிறை நடைமுறைகள் முடிந்து முறைப்படி விடுதலை செய்ய்ப்பட்டார் !

author img

By

Published : May 18, 2022, 10:45 PM IST

சென்னை: உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு விடுதலை கொடுத்து தீர்ப்பளித்ததையடுத்து பேரறிவாளனின் பிணை பத்திரம் ரத்து செய்யப்பட்டு புழல் மத்திய சிறை 1-ன் தண்டனை பதிவேடுகளில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டார் என காவல் துறை இயக்குநர், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழக்கு சி.ஏ.எண்.833-834 / 2022 நாள் .18.05.2022இல் பேரறிவாளனுக்கு குற்ற எண்.329 / 1991-ல் வழங்கப்பட்ட தண்டனையினை அவர் முழுவதுமாக கழித்ததாக கருதி அவரை இந்திய அரசியல் சாசனம் பிரிவு 142 -ன் படி விடுதலை செய்யவும் அவருக்கான பிணைப்பத்திரத்தினை ரத்து செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி பேரறிவாளனது பிணைப்பத்திரம் ரத்து செய்யப்பட்டு புழல் மத்திய சிறை 1-ன் தண்டனை பதிவேடுகளில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு 18.05.2022அன்று விடுதலை செய்யப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பேரறிவாளன் விடுதலையால், நீட் வழக்குக்கும் வழி பிறக்குமா - சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.