திருப்பத்தூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன் சிறை தண்டனை அனுபவித்துவருகிறார். அவருடைய தாய் அற்புதம்மாள் கடந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்று வைத்தார்.
அந்தக் கோரிக்கையில் புழல் சிறையில் கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதாலும், தன் மகன் பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று உள்ளதைக் கருத்தில்கொண்டும், அவருக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இதையடுத்து 30 நாள்கள் பரோல் வழங்கப்பட்டது.
சென்னை புழல் சிறையிலிருந்து பேரறிவாளன் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார். அதைத் தொடர்ந்து பேரறிவாளன் உடல்நிலை சீராகாததால் பலமுறை பரோல் நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து இம்மாதம் பரோல் முடிவடையவுள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் காலம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை 9 மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட ஏபிவிபி அமைப்பினர் 32 பேருக்குப் பிணை