கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளர்கள் மின் கட்டணங்களை இணையதளம் வாயிலாகச் செலுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அது வெளியிட்ட அறிக்கையில், "கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாதத்திற்கான ரீடிங் எடுக்கப்படவில்லை என்றும், எனவே, மக்கள் கடந்த மாதம் செலுத்திய அதே மின்கட்டணத்தைச் செலுத்துமாறும் கூறியுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்காகச் செலுத்தப்பட்ட மின் கட்டணங்கள் அதிகமாகவோ, குறைவாகவோ செலுத்தப்பட்டிருப்பின் அவை பயனீட்டாளர்கள் செலுத்தியுள்ள இணையதள கணக்குகள் மூலம் சரிசெய்துகொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளது.
மேலும், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அலுவலகங்களுக்குச் சென்று மின் கட்டணங்கள் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை - கள உதவியாளர் பணிக்கான விண்ணப்ப தேதி ஒத்திவைப்பு!