ETV Bharat / state

சென்னையிலிருந்து மக்கள் சொந்த ஊர் திரும்பக் கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சென்னையை விட்டு சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

peoples allow to native place Without Epass , notice issued to state

author img

By

Published : Jul 16, 2020, 6:18 PM IST

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மக்கள் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழந்துதவிக்கின்றனர். இதனால் சென்னைக்கு வேலை தேடிவந்த மக்கள் பலரும், சொந்த ஊருக்குத் திரும்பிவருகின்றனர்.

சொந்த ஊர்களுக்குத் திரும்புகிறவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த சேசுபாலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ”கரோனா தொற்றின் தாக்கம் நவம்பர் மாதம் வரை உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உணவு, உறைவிடத்திற்கான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயற்சித்துவருகின்றனர். அவர்களுக்கு இ–பாஸ் வழங்கப்படவில்லை.

திருமணம், இறப்பு, மருத்துவக் காரணங்களுக்கு மட்டுமே இ–பாஸ் வழங்கப்படுவதால், சென்னையை விட்டு வெளியேற விரும்பும் மக்களைச் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.