சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவிடம் கட்டுவது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற 34 உறுப்பினர்களில் 22 பேர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இது குறித்து கடந்த
ஜனவரி 31ஆம் தேதி சென்னையில் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி, பாஜக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எனினும், இந்த கூட்டத்தில் சலசலப்பை சிலர் ஏற்படுத்தினர்.
இதனிடையே இன்று வெளியிடப்பட்ட கூட்டத்தின் அறிக்கையின்படி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த நினைவுச் சின்னத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தார். மேலும் நினைவுச்சின்னத்தை கடலில் கட்டினால் உடைப்பேன் என்று கூறினார். கூட்ட அரங்கில் இருந்த பொதுமக்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் மற்றும் உறுப்பினர், செயலாளர், பொதுமக்களை சமாதானம் செய்து, போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கூட்டத்தில் எழுப்பப்பட்ட முக்கிய விஷயங்களை விளக்கி ஆவணத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிவு செய்தது.
சமூக அமைப்பான சட்ட பஞ்சாயத்து இயக்கம், தேசிய பாரம்பரிய மீன்பிடி கூட்டமைப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், பூவுலகின் நண்பர்கள் உட்பட பதினொரு பங்கேற்பாளர்கள் திட்டத்திற்கு அச்சம் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்ததை வாரியம் ஒப்புக்கொண்டாலும், பெரும்பான்மையானவர்கள் வரவேற்றனர் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்: 22 பேர் ஆதரவு - 22 பேர் ஆதரவு
கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க 22 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.