ETV Bharat / state

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதுச்சேரி அரசுக் கல்லூரி முதல்வர் பதவி விலகல்

சென்னை : உதவிப் பேராசிரியர் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து தம்பிதுரை விலகியுள்ளார்.

pec college principal resign his post
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதுச்சேரி அரசு கல்லூரி முதல்வர் பதவி விலகல்
author img

By

Published : Jan 23, 2020, 7:29 AM IST

பொறியியல் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்படுபவர்கள், பொறியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது அரசு விதிமுறை. இந்த விதிமுறைக்கு மாறாக கணிப்பொறி அறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற தம்பிதுரை, பொறியல் கல்லூரி முதல்வராகப் பதவி வகித்ததற்கு எதிராக புதுச்சேரி அரசிடமும் காமராஜர் கல்லூரியிடமும் உதவிப் பேராசிரியர் புவனேஸ்வரி என்பவர் புகாரளித்துள்ளார். தான் அளித்த புகார் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் மனு மீது 2 மாதத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து தம்பிதுரை அதே பதவியில் நீடித்ததன் காரணமாக, உதவிப் பேராசிரியர் புவனேஸ்வரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திக்கேயன், ஜனவரி 9ஆம் தேதிக்குள் அரசு பொறியியல் கல்லூரியின் முதல்வர் பதவியிலிருந்து தம்பிதுரை விலக உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பொறியியல் கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து தம்பிதுரை விலகிவிட்டதாக உயர்க்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக காரைக்காலில் உள்ள காமராஜர் பொறியியல் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக தம்பிதுரை பணியாற்றிவந்ததும் கவனிக்கத்தக்கதாகும்.

இதையும் படிங்க : பாஜகவை கழட்டிவிடுவோம் ... இல்ல எங்கள பிரிக்க முடியாது - உளறிய அமைச்சர் பாஸ்கரன்!

Intro:Body:நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி பொறுப்பு முதல்வர், தன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் முதல்வராக இருந்த தம்பிதுரை, காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக கடந்த10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

பொறியியல் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்படுபவர்கள், பொறியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் கணிபொறி அறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற அவர், பொறியல் கல்லூரி முதல்வராக நீட்டிக்க தகுதியில்லை என, உதவி பேராசிரியர் புவனேஸ்வரி, புதுச்சேரி அரசுக்கும், காமராஜர் கல்லூரிக்கும் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, புவனேஸ்வரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரின் மனு மீது 2 மாதத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து தம்பிதுரை அதே பதவியில் நீடித்ததன் காரணமாக, உதவி பேராசிரியர் புவனேஸ்வரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், ஜனவரி 9 ம் தேதிக்குள் பொறியியல் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து தம்பி துரை விலக உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், பொறியியல் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து தம்பிதுரை விலகி விட்டதாக உயர் கல்வி துறைக்கு கடிதம் அனுப்பியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.