ETV Bharat / state

கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட டெல்லி பயணிகள்

author img

By

Published : May 15, 2020, 10:24 PM IST

சென்னை: சிறப்பு ரயில் மூலம் டெல்லியிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த 797 பயணிகள் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கல்லூரியில் தனிமைப்படுத்த பட்ட டெல்லி பயணிகள்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. விமானம், ரயில் உள்ளிட்ட பொதுபோக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக மத்திய அரசு சிறப்பு ரயில் சேவையை ஏற்பாடு செய்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வருவபர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிந்த பின்பே தங்களது ஊருக்கு செல்ல அனுமதிப்படுவார்கள் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஊரடங்கால் டெல்லியில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 797 பேர் நேற்று சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். இதன்பின் தனி பேருந்து மூலம் தனிமைப்படுத்தும் இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பயணிகள் தங்கியிருக்கும் இடத்தை சென்னை மாநகராட்சி சார்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அலுவலர்கள்
ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அலுவலர்கள்

வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு கரோனா அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறிந்து, அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லாதபட்சத்தில் வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் இவர்களில் யாரேனும் ஒருவருக்கு கரோனா இருந்தாலும் அனைத்து பயணிகளும் 14 நாட்கள் அரசு தனிமைப்படுத்தும் இடத்தில், தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க: 'தொழிலாளர் சட்டங்களில் சமரசம்'- ஆபத்தா, வளர்ச்சியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.