சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இன்று (ஜூன் 9) 42 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து டெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி, புபனேஸ்வா், அந்தமான், ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த விமானங்களில் 4,900 போ் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனா். மேலும் நேற்று(ஜூன்-8) 48 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு 5,550 போ் பயணித்தனா். இன்று (ஜூன்-9) 650 பயணிகள் குறைந்ததால், இயக்கப்படும் விமானங்களும் 48-லிருந்து 42-ஆக குறைந்துள்ளது. இதற்குக் காரணம் போதிய பயணிகள் இல்லாதது தான் எனக்கூறப்படுகிறது.
அதுபோல கவுகாத்தியிலிருந்து இன்று (ஜூன்-9) இரவு சென்னை வரும் விமானத்தில் 7 பயணிகள் தான் முன்பதிவு செய்துள்ளனா். எனவே, போதிய பயணிகள் இல்லாமல் சேலம், கொச்சி, விஜயவாடா, கடப்பா, ராஜமுந்திரி ஆகிய இடங்களுக்கு இன்று (ஜூன்-9) விமான சேவைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊரடங்கு முடியும் வரை 33 சதவிகித பணியாளர்களை மட்டும் அனுமதிக்க கோரிக்கை!