ETV Bharat / state

'நீதி வேண்டும்... நீதி வேண்டும்... ஃபாத்திமாவுக்கு நீதி வேண்டும்!' - DMK on Fathima latheef

சென்னை: ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட ஃபாத்திமா லத்தீப் வழக்கில் உரிய  நீதி கோரியும் நிறுவன படுகொலைக்கு எதிராக பல்வேறு கட்சியினர் இணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

DMK on Fathima latheef
author img

By

Published : Nov 19, 2019, 2:55 PM IST

கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் கடந்த வாரம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் ஃபாத்திமாவுக்கு நீதி கோரியும் நிறுவன படுகொலைக்கு எதிராகவும் திக, திமுக, மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்எல்ஏ எழிலரசன், "கேரள மாநிலத்தைச் சேர்த்த ஃபாத்திமாவுக்கு வேறு மாநிலத்தில் படிக்க இடம் கிடைத்தும்கூட தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்றே சென்னை ஐஐடியை தேர்வு செய்தார்.

அங்கு நடத்தக்கூடிய தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துச் சிறப்பான மாணவி எனப் பெயர் பெற்றவர். கடந்த 9ஆம் தேதி தன்னால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்ற விளிம்பு நிலைக்குச் சென்ற அவர், தன்னுடைய மரணத்திற்கு யாரெல்லாம் காரணம் என்று தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஃபாத்திமாவுக்கு நீதி வேண்டி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அதே நேரத்தில் அந்த இடத்தில் தற்கொலைக்கான எந்தச் சூழ்நிலையும் இல்லை, இதனால் இது கொலையா? என்று அவரது பெற்றோர் சந்தேகத்தை எழுப்புகின்றனர். மாணவி தற்கொலைக்குக் காரணமாகச் சுட்டிக் காட்டியிருக்கும் மூன்று பேராசிரியர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அவர்கள் சாட்சியங்களை அழிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோன்ற இன்னொரு பிரச்னை நடக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 5 புதிய மாவட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கும் நாள், நேரம் அறிவிப்பு!

Intro:Body:சென்னை:

கேரளாவைச் சேர்ந்த ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி கோரியும், நிறுவன படுகொலைக்கு எதிராகவும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் இணைந்து
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பாத்திமா மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், பல்கலைக்கழகங்களில் உள்ள சாதிய பாகுபாடுகளை களையவேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ. சிவிஎம்பி எழிலரசன்,

"ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா கேரள மாநிலத்தைச் சேர்த்தவர். அவருக்கு வேறு மாநிலத்தில் படிக்க இடம் கிடைத்தும்கூட தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்ன சென்னை ஐஐடி- யை தேர்வு செய்தார். அங்கு நடத்தக்கூடிய தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து சிறப்பான மாணவி என பெயர் பெற்றவர். கடந்த 9ம் தேதி தன்னால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்ற விளிம்பு நிலைக்கு சென்ற பிறகு தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு தன்னுடைய மரணத்திற்கு யாரெல்லாம் காரணம் என அவர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே நேரத்தில் அந்த இடத்தில் தற்கொலைக்கான எந்த சூழ்நிலையும் இல்லை இதனால் இது கொலையா என அவரது பெற்றோர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர். மாணவி தற்கொலைக்கு காரணமாக சுட்டிக் காட்டியிருக்கும் மூன்று பேராசிரியர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதுவரை துறை ரீதியிலான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. உள்ளே இருந்தால் சாட்சியங்களை அழிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவர்களும் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் இதுபோன்ற இன்னொரு பிரச்சினையில் நடக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும். இந்த போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த வகையில் அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார்.
Conclusion:Visual in mojo
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.