ETV Bharat / state

முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனை குழு குறித்த அறிமுகம்

author img

By

Published : Jun 21, 2021, 4:24 PM IST

ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ உள்ளிட்டோர் அடங்கிய குழு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பொருளாதாரம் குறித்த ஆலோசனைகளை வழங்க அமைக்கப்பட்டுள்ளது அந்த குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.

Panel of Economists under the Chief Minister MK Stalin
முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழுவினர் குறித்த அறிமுகம்

சென்னை: தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையாற்றும் போது ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் ட்ரெஸ், எஸ். நாராயண் ஆகியோர் அடங்கிய குழு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைகளை வழங்கும் எனக்குறிப்பிட்டார். இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ள இந்த ஐந்து பேர் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்

ரகுராம் ராஜன்

பொருளாதார வல்லுநரான ரகுராம் ராஜன் ஆர்பிஐயின் முன்னாள் ஆளுநராக பதவிவகித்தவர். அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்ல் எம்பிஏ படித்தவர், உலக வங்கியின் மூத்த அலுவலராகப் பணியாற்றியவர். மன்மோகன் சிங் ஆட்சியில் பிரதமரின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர். 2014ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வந்ததும், பாஜகவுக்கும் இவருக்கும் பிணக்குகள் ஏற்பட்டன. பணமதிப்பிழப்பு உள்ளிட்ட ஒன்றிய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை விமர்சித்துவந்தவர்.

Panel of Economists under the Chief Minister MK Stalin
ரகுராம் ராஜன்

அரவிந்த் சுப்ரமணியன்

ரகுராம் ராஜன் ஆர்பிஐ ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்பு பிரதமரின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டவர். பஞ்சாப்பில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் உயர்பதவியை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வந்தவர். அந்தப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பானு மேத்தா எனும் பேராசிரியர் மத்திய அரசை விமர்சித்ததன் காரணமாக பதவியை விட்டு விலக நேர்ந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாக தன்னுடைய பதவியையும் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினமா செய்தார்.

ஒன்றிய அரசு செய்யவேண்டிய விஷயங்கள் குறித்தும், செய்த தவறுகள் குறித்தும் தொடர்ச்சியாக நாளிதழ்களில் பத்திக்கட்டுரை எழுதிவருபவர். 2011ஆன் வெளியிறவு கொள்கை என்னும் இதழ் இவரை உலகின் முதல் 100 உலகளாவிய சிந்தனையாளர்களில் ஒருவராக மதிப்பிட்டுள்ளது.

சுப்ரமணியன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சித் துறையில் உதவி இயக்குநராக இருந்தார். அப்போது, அவருக்கு ரகுராம் ராஜனுடன் நெருக்கம் ஏற்பட்டதுய. 1999 முதல் 2000 வரை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

எஸ்தர் டஃப்லோ

பிரான்ஸ் நாட்டை பிறப்பிடமாக கொண்ட எஸ்தர், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான மாசசூசெட்டஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பொருளாதாத் துறையில் பணிபுரிகிறார். 'வறுமை ஒழிப்பு தொடர்பான புதிய அணுகுறை என்று' தனது கணவர் சஞ்சிப் பானர்ஜியுடன் இணைந்து நடத்திய ஆய்வுக்கு 2019ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். அமெரிக்க பொருளாதார மதிப்பாய்வு எனும் இதழின் ஆசிரியராகவும், தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினராகவும் இவர் உள்ளார். ஏழை நாடுகளின் வளர்ச்சிக்கு உதவி வழங்குவது தொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஓபாமாவிற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

ஜீன் ட்ரெஸ்

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜீன் ட்ரெஸ், இங்கிலாந்தில் படித்தவர், இந்தியாவில் புள்ளியியில் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று, தற்போது டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டுவர காரணமாக இருந்தவர்.

எஸ். நாராயண்

சென்னையைச் சேர்ந்த டாக்டர் எஸ். நாராயண் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராக இருந்தவர். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், மாநில, ஒன்றிய அளவில் முக்கிய பதவிகள் வகித்தவர். வரத்தகத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் தலைமை பதவியை அலங்கரித்தவர்.

பொதுக்கொள்கை, பொது நிதி, வர்த்தகம், எரிசக்தி தொடர்பான பிரச்னைகள் தொடர்பாக தொடர்ச்சியாக எழுதிவருகிறார். இவரின் எழுத்து வெளிநாடுகளில் உள்ள பல்வேறு நாளிதழ்கள், இதழ்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் வருகை தரும் மூத்த ஆராய்ச்சி உறுப்பினராகவும் இவர் உள்ளார்.

சுமார் நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் உள்ள தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்யும் நடவடிக்கையாக பொருளாதார அறிஞர்கள் முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றிருப்பது நல்ல விளைவுகளைத் தரும் என்று உறுதியாக நம்பலாம்.

இதையும் படிங்க: 'வலுவான மாநில அரசுகளாலேயே வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.