ETV Bharat / state

தேசியக்கொடி ஏற்றும் உரிமையை இழந்து தவிக்கும் ஊராட்சித் தலைவர்கள்; ஆட்டிப்படைக்கும் ஆதிக்க வர்க்கம்! - மதுரை

'இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து பவளவிழாவைக் கொண்டாடினாலும், பட்டியலினத்தலைவர்கள் கிராமங்களில் தேசியக்கொடியை ஏற்றமுடியாத சூழ்நிலை தொடர்ந்து நிலவிக் கொண்டு தான் இருக்கிறது. மேலும் பட்டியல் இனத் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்ற முடியாத நிலை குறித்து தமிழ்நாடு அரசு மெளனமாக இருப்பது குற்றத்தை ஊக்குவிப்பது போல் உள்ளது’ என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றஞ்சாட்டுகிறது.

தேசியக் கொடி ஏற்றும் உரிமையை இழக்கும் ஊராட்சி தலைவர்கள்; ஆட்டிபடைக்கும் ஆதிக்க வர்க்கம்

author img

By

Published : Aug 11, 2022, 8:10 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 20 ஊராட்சிகளில் கடந்த ஆண்டு தேசியக்கொடியை சாதியப்பாகுப்பாட்டினால் ஏற்ற முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், எடுத்தவாய் நத்தம் ஊராட்சித்தலைவர் சுதா வாசுதேவன், தேசியக்காெடியை ஏற்றுவதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட காவல்துறை அலுவலருக்கு புகார் மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தீர்வு காணப்பட்டது. மேலும் திண்டுக்கல், மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, கோயம்புத்தூர், திருவள்ளூர், விருதுநகர், சிவகங்கை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கிராமப்பஞ்சாயத்துகளில் தேசியக்காெடியை ஏற்றுவதற்கு நடப்பாண்டிலும் பிரச்னை வரும் எனத்தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் ''ஈடிவி பாரத் தமிழ்நாடு'' ஊடகத்திற்கு அளித்த சிறப்புப்பேட்டியில், 'சமூகத்தில் தீண்டாமை இருக்கத்தான் செய்கிறது. பள்ளிகள், கல்லூரிகளில் தீண்டாமை தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவக்கல்வி நிறுவனத்திலும் தீண்டாமை தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது என நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் மனப்பக்குவம் வளரவேண்டும்: பட்டியலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, அவர்கள் முன்னேற்றம் அடைந்தாலும், அறிவியல் ரீதியாக வளர்ந்தாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் மக்களுக்கு வளரவில்லை. தற்பொழுதும் தீண்டாத கலாசாரம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அறிவியல் ரீதியாக வளர்ந்தாலும், அரசும், அரசியல்வாதிகளும், அதனை வளர்க்கவில்லை. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், சட்டம் வலுவானதாக இருந்தாலும், அதனை செயல்படுத்தும் அரசும் வலுவானதாக இருக்க வேண்டும்.

பட்டியலினத்தோர் வன்கொடுமைச்சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகளில் 5 விழுக்காடு வழக்குகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வழக்கறிஞர் பா.பு.மோகன் போன்றவர்கள் எடுக்கும் நடவடிக்கையால் கிடைக்கிறது.

பட்டியலினத்தோர்களுக்கு வன்கொடுமை செய்தால், அதற்கான சட்டத்தில் இருந்து தப்பமுடியாது என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும். தேசியக் கொடியை பட்டியல் இனத்தலைவர் ஏற்றும் போது, அதனை பலர் வீடியோ எடுத்தாலும் கொடி ஏற்றுபவரை தள்ளிவிடுகிறார் என்றால், அரசு நடவடிக்கை எடுக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மறுக்கப்படும் தேசியக்கொடி ஏற்றும் உரிமை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், எடுத்தவாய்நத்தம் ஊராட்சியில் கிராமத்தலைவர் சுதா வரதராஜ் தேசியக்கொடியை ஏற்ற முடியாத நிலை குறித்துப்புகார் அளித்தார். ஆனால், அவரை மிரட்டி, பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் தேசியக் கொடியை ஏற்றட்டும் என எழுதி வாங்கி உள்ளார், சின்னசேலம் வட்டாட்சியர். இது குறித்து புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்திலும் வழக்குத்தொடர்ந்து வட்டாட்சியர் குற்றவாளி என்பதை நிரூபிப்போம்.

மேலும் சட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டுத்தான் பொது அமைதியை நிலை நாட்ட வேண்டும். சட்டத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டாமல் மயான அமைதியை நிலை நாட்டத்தேவையில்லை. தேசியக்காெடி ஏற்றுவது உள்ளிட்டவற்றுக்கும் ஜனநாயத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் பட்டியலினத் தலைவர்கள் பிரத்யேகமான சட்டத்தின் மூலம் தேர்வுசெய்யப்படுகின்றனர். அவர்களுக்கு உரிமைகளும், சலுகைகளும் பிரத்யேகமாகவே கிடைப்பதை அரசும் உறுதிசெய்ய வேண்டும். பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தேர்வுசெய்யப்படும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அந்த மக்களுக்கான தேவைகளுக்காக குரல் கொடுப்பதில்லை. தனக்கு சீட் அளித்த கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதியாக வந்துள்ளோம் என்ற நினைவில் செயல்படுவதில்லை.

தேசியக்காெடி ஏற்றுவதைத் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் என யாராவது அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மெளனம் காப்பது குற்றத்தை செய்ய உறுதுணையாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது’ எனத் தெரிவித்தார்.

தேசியக்கொடி ஏற்றும் உரிமையை இழந்து தவிக்கும் ஊராட்சித் தலைவர்கள்; ஆட்டிப்படைக்கும் ஆதிக்க வர்க்கம்!

இது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் தாரேஸ் அகமது கூறும்போது, ’சுதந்திர தினத்தன்று தலைவர்கள், தேசியக் கொடியை ஏற்றுவதை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுதந்திர தினத்தன்று யார் கொடி ஏற்றுவது - பேச்சுவார்த்தையில் சமரசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.