ETV Bharat / state

சசிகலாவின் ரூ.100 கோடி மதிப்பிலான பையனூர் பங்களா முடக்கம்! - மாநில செய்திகள்

சென்னை: சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பையனூர் பங்களாவையும், இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

சசிகலா
சசிகலா
author img

By

Published : Sep 8, 2021, 4:47 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னதாக சசிகலாவை வருமான வரித்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சசிகலா பினாமி பெயரில் வாங்கிக் குவித்தது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பல கோடி ரூபாயை முறைகேடாக மாற்றி. பினாமி பெயரில் 1,600 கோடி ரூபாய் வரை சொத்துகளை வாங்கிக் குவித்திருந்ததும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து 2019ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஜாஸ் சினிமாஸ், ஸ்பெக்ட்ரம் மால், கங்கா சினிமாஸ் உள்பட 10 நிறுவனங்கள் பினாமி பெயரில் வாங்கப்பட்டதை அடுத்து சுமார் 1,600 கோடி ரூபாய் சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கினர்.

மேலும் 2003, 2005ஆம் ஆண்டுகளின் காலக்கட்டத்தில் 65 நிறுவனங்களை முறைகேடாக வாங்கியதும், அதன் அடிப்படையில் பினாமி பெயரில் வாங்கப்பட்ட ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ ஹரிசந்தனா எஸ்டேட்ஸ், சென்னை போயஸ் கார்டனில் உள்ள 10 கிரவுண்ட் நிலம் என மொத்தம் 300 கோடி ரூபாய் சொத்துகளை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டு கடந்த 2020ஆம் ஆண்டு பினாமி தடுப்புச்சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் முடக்கினர்.

பையனூர் பங்களா
பையனூர் பங்களா

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் பகுதியில் 49 ஏக்கரில் அமைந்துள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர். மேலும், பங்களா முடக்கப்பட்டதற்கான 10 பக்கங்கள் கொண்ட நோட்டீஸையும் வருமான வரித்துறையினர் ஒட்டிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இதுவரை சசிகலாவுக்கு சொந்தமான 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறை நோட்டிஸ்
வருமான வரித்துறை நோட்டிஸ்

தற்போது முடக்கப்பட்டுள்ள பையனூர் நிலம், தன்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்டது என இசையமைப்பாளர் கங்கை அமரன் முன்னதாக புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேர்தலுக்குத் தயாராகும் பாஜக: 5 மாநில பொறுப்பாளர்கள் நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.