ETV Bharat / state

பத்ம பூஷன் விருது பெறும் வாணி ஜெயராம்.. வளர்ந்து வந்த கதை! - பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உட்பட 9 பேருக்கு, பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது

author img

By

Published : Jan 26, 2023, 11:43 AM IST

சென்னை: 1945ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் வாணி ஜெயராம். இயற்பெயர் கலைவாணி. சிறுவயதிலேயே இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தன்னுடைய இனிமையான குரலால் வானுயர வளர்ந்து நிற்பவர். இவர், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசையைப் பயின்றவர்.

வானொலியில், போடப்படும் பாடல்களைக் கேட்டுக் கேட்டு தானும் ஒரு பாடகியாக வேண்டும் என்கிற ஆசையை மனதில் வைத்து அதன்படி சாதித்தும்காட்டியவர். இசை மீது வாணி ஜெயராமுக்கு இருந்த தீரா காதல் இவரை இந்திய அளவில் புகழ்மிக்க பாடகியாக மாற்றியது.

ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னர் ஒரு ஆண் இருப்பர் என்பது வாணி ஜெயராம் விஷயத்தில் 100 சதவீதம் உண்மை. மனைவியின் பாடகி ஆசையை நிறைவேற்றப் பக்க பலமாய் நின்றார் அவரின் கணவர் ஜெயராம். 1971-ம் வருடம் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம்.

இவரது முதல் பாடலே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர்களால் தேடப்படும், முன்னணி பாடகியாக உருவெடுத்தார். ஹிந்தியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஓடியா, பெங்காலி என 10க்கும் மேற்பட்ட மொழி பாடங்களை பாடி பிரபலமானார்.

குறிப்பாக வாணி ஜெயராம் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் பாடிய ஏழு ஸ்வரங்களுக்குள் என்ற பாடலுக்காகச் சிறந்த பின்னணி படகிக்கான தேசிய விருதை பெற்றார். இதை தொடர்ந்து தெலுங்குப் பட பாடலுக்காகவும் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் தமிழ் நாடு ஸ்டேட் விருது, குஜராத் ஸ்டேட் விருது, ஒடிசா ஸ்டேட் விருது, நந்தி விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு, கலை, அறிவியல், தோழி ரீதியாக சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான 'பத்ம பூஷன்' விருது விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் உட்பட இந்த விருது மொத்தம் 9 பேருக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இவருக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: 74th republic day: தமிழ்நாடு அரசு விருது பெற்றவர்கள் விபரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.