சென்னை: கவிஞரும், இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநருமான விடுதலை சிகப்பி என்பவர் மீது கலகத்தைத் தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல், எந்த ஒரு பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், ''கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் 'மலக்குழி மரணம்' எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஸ்வரன் கவிதை ஒன்றை வாசித்திருந்தார்.
அக்கவிதை, நாடு முழுக்கத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதாகும். அத்தகைய மரணங்களைக் கண்டும் காணாமல் போகும் சமூக நிலையைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காக, சாதாரண மனிதர்களுக்குப் பதில் கடவுள் ஸ்தானத்தில் இருப்பவர்கள், அத்தகைய வேலையைச் செய்து மரணத்தைத் தழுவினாலாவது கவனம் பெறுமோ என்கிற பொருளில் அந்தக் கவிதை இருந்தது.
எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரம் அது. மற்றபடி எந்த நம்பிக்கையையும் திட்டமிட்டு இழிவாக எழுதுவதோ, பேசுவதோ கவிதையின் நோக்கம் அல்ல. அப்படி இருக்கும்போது, பிறப்பால் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவரான விடுதலை சிகப்பி என்ற விக்னேஸ்வரனை 'வேற்று மதத்தைச் சேர்ந்தவன் இந்து மதத்தைப் பழிக்கிறான்' என்ற பொய் பிரசாரத்தை இணையத்தில் சில குழுக்கள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து செய்து வந்ததன் தொடர்ச்சியாக, விடுதலை சிகப்பி என்ற விக்னேஸ்வரன் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
தனி நபரின் படைப்புச் சுதந்திரத்தை மதப் பிரச்னையாக மாற்றும் செயலை ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டி இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக தனிப்பட்ட முறையில் விடுதலை சிகப்பி இக்குழுக்களால் மிரட்டப்படுகிறார். இக்குழுக்கள் கொடுக்கும் அழுத்தத்தால் கடந்த மூன்று நாட்களாக விடுதலை சிகப்பியின் கிராமத்தில் இருக்கும் பெற்றோர், காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக் கொள்ளாமல் அல்லது விளங்கிக் கொள்ள விரும்பாமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராக தொடுத்த வழக்கைப் பதிவு செய்திருக்கும் காவல் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. இக்கவிதையின் பாடுபொருள் மலக்குழி மரணம் பற்றியது.
-
இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார்… pic.twitter.com/HSBvbJmKQT
— pa.ranjith (@beemji) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார்… pic.twitter.com/HSBvbJmKQT
— pa.ranjith (@beemji) May 9, 2023இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார்… pic.twitter.com/HSBvbJmKQT
— pa.ranjith (@beemji) May 9, 2023
உண்மையில் அவைதான் பேசு பொருளாகி இருக்க வேண்டும். அதை திசை மாற்றி, மதப் பிரச்னையாக உருமாற்றும் நடவடிக்கையை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதாக இவ்விவகாரத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்டத் தலைவரான சுரேஷ், காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Viduthalai Sigappi: பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் வழக்கு!