சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே அறிவித்திருந்தது. இந்நிலையில், டிசம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் தென் தமிழகம் மற்றும் தென் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இரண்டு நாட்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
#OrangeAlert:
— India Meteorological Department (@Indiametdept) December 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
South #TamilNadu is expected to receive heavy to very heavy rainfall between 115.6 to 204.4 mm from 16th-17th December. Be prepared and stay safe! pic.twitter.com/oR2zWptwPO
">#OrangeAlert:
— India Meteorological Department (@Indiametdept) December 15, 2023
South #TamilNadu is expected to receive heavy to very heavy rainfall between 115.6 to 204.4 mm from 16th-17th December. Be prepared and stay safe! pic.twitter.com/oR2zWptwPO#OrangeAlert:
— India Meteorological Department (@Indiametdept) December 15, 2023
South #TamilNadu is expected to receive heavy to very heavy rainfall between 115.6 to 204.4 mm from 16th-17th December. Be prepared and stay safe! pic.twitter.com/oR2zWptwPO
நாளைய(டிச.16) மழை நிலவரம்: இது குறித்து முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "மேலும் நாளை(டிச.16) இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 17ஆம் தேதிக்கான மழை நிலவரம்: இதைத்தொடர்ந்து, 17-ஆம் தேதி அன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று தெரிவித்திருந்தது.
தென்தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்: இந்நிலையில்,தற்போது தென்தமிழகம் பகுதிகளுக்கு வருகின்ற டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 115.6 மி.மீ முதல் 204.4மி.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கபட்டு உள்ளது.
ஆரஞ்சு அலர்ட் என்றால் என்ன?: மழைப்பொழிவு எச்சரிக்கைகளை சில வண்ணக்குறிப்புகள் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் புயல் அல்லது மழை நிலவரத்தை பொறுத்து வானிலை ஆய்வு மையம் வெளியிடுவர். மழை அளவைப் பொறுத்து மஞ்சள், பச்சை, ஆரஞ்சு என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.இதையடுத்து, பச்சை வண்ணக்குறியீடு 24 மணி நேரத்தில் 64 மி.மீ.க்கும் குறைவாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் போது வெளியிடப்படும்.
குறிப்பாக 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும். ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படும். மிகவும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படும் போது ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிடப்படுகிறது. இந்த எச்சரிக்கை போக்குவரத்து, ரயில், சாலை மற்றும் விமானத்திற்கு போன்று அத்தியாவசிய தேவைகளான மின்சார விநியோகத்திலும் இடையூறு விளைவிக்கும்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!