ETV Bharat / state

மேகதாது அணை - சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் அறிவுரை - ஓபிஎஸ் அறிக்கை

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அறிக்கை
ஓபிஎஸ் அறிக்கை
author img

By

Published : Jul 8, 2021, 11:03 AM IST

Updated : Jul 8, 2021, 12:08 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்ச நீதிமன்றத்துக்கு இணையான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முற்றிலும் அவமதிக்கும் வகையிலும், இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையிலும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தப் பிறகும் 'மேகதாதுவில் அணை கட்டப்படும்' என கர்நாடக முதலமைச்சர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகதாதுவில் அணை கட்ட 2014ஆம் ஆண்டு கர்நாடக அரசு திட்ட அறிக்கையை தயார் செய்வதற்காக 25 கோடி ரூபாயை ஒதுக்கியபோதே, அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் எந்த நீர் திட்டத்திற்கும் ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் என்ற தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, என்னால் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 5, 2015ஆம் ஆண்டு மார்ச் 27 ஆகிய நாள்களில் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மனு

இந்தத் தீர்மானங்கள் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 2015ஆம் ஆண்டு மார்ச் 12 ஆகிய தேதிகளில் கடிதங்கள் மூலம் ஒன்றிய அரசுக்கு உடனடி நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது என்பதையும் நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுகிறேன்.

இது தொடர்பாக 2015 மார்சி 26ஆம் அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் வழங்கல் என்ற போர்வையில், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சரின் தன்னிச்சையான அறிவிப்பு, தமிழ்நாடு மக்களை குறிப்பாக விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதன் விளைவாக, பாசனத்திற்கும், குடிநீருக்கும் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு பாலைவனமாகக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

முதலமைச்சருக்கு வேண்டுகோள்

'அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது' என்று கர்நாடாக முதலமைச்சர் தன்னிச்சையாக அறிவித்திருப்பதற்கு அதிமுகவின் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற ஒருதலைபட்சமான செயல் இரு மாநில உறவையும் பாதிக்கும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, மேகதாது அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்காத வகையில், சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜெர்மனியில் அமைந்துள்ள கொலேன் பல்கலைக்கழகத்துக்கு ஒரு கோடி நிதி உதவி - முதலமைச்சர் அறிவிப்பு

Last Updated : Jul 8, 2021, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.