அதிமுக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், இந்த விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.
நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "தமிழ்நாட்டில் என்றுமே ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் நினைக்கிறார்கள். அது 9 பேர் வெற்றி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவைப் பார்க்கும்போது, நல்லவர்களை ஆண்டவர் சோதிப்பார். ஆனால் கைவிடமாட்டார். கெட்டவர்களுக்கு நிறையக் கொடுப்பார். ஆனால் கைவிட்டு விடுவார். எதிரணிக்கு நிறைய கிடைத்ததுபோல் இருந்தாலும், அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை" என்று தெரிவித்தார்.