சென்னை விமான நிலையத்திற்கு மதுரையில் இருந்து விமானத்தில் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் பால் விலை, மின்சார உயர்வுக்கு போராட்டம் குறித்து அறிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு ’மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின் தெரிவிக்கப்படும்’ என்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பி சத்தம் போட்டனர். உடனே ’கோஷம் எழுப்பி சத்தம் போட வேண்டாம்’ என்றார். அப்போது அங்கிருந்த வட மாநில பெண்கள் ஓ.பன்னீர்செல்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய விவகாரம்; அமைச்சர் குழு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை - முழுவிவரம்