ETV Bharat / state

பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் விமான நிலையம் வருகை

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக ஓபிஎஸ் சென்னை விமான நிலையம் வருகை!

author img

By

Published : Jul 29, 2022, 11:29 AM IST

சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று (ஜூலை 28) சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின், பிரதமர் மோடி இன்று (ஜூலை 29) காலை 11.55 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் அகமதாபாத் செல்ல உள்ளார்.

நேற்று மாலை சென்னை வந்த பிரதமரை, விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்களுடன் சேர்ந்து வரவேற்றார். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று காலை பங்கேற்ற பிரதமர் மோடி, அதன் பின் காலை 11:50 மணியளவில் பிரதமர் மோடி விமான நிலையம் வர இருக்கிறார்.

இந்நிலையில், பிரதமரை சந்தித்து பேசுவதற்காக ஓ பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்ட தலைமை குழப்பங்கள் இன்னும் முழுமையடையாத நிலையில், இச்சந்திப்பு நிகழ்வு அரசியல் தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: 44th Chess Olympiad - 'விளையாட்டில் தோற்பவர்கள் எவரும் கிடையாது' - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.