ETV Bharat / state

கோடநாடு வழக்கிற்காக கரம்கோர்த்த ஓபிஎஸ் - டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க உதவுமா? - பாஜக கூட்டணி

கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த கோரிய ஓபிஎஸ் அணியினரின் ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன் கலந்து கொள்ள உள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக எதிர்க்க உதவுமா என்பது குறித்து ஆராய்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

OPS and TTV Dhinakaran united for Kodanad case this alliance help oppose to aiadmk general secretary Edappadi Palaniswami
கோடநாடு வழக்கிற்காக கரம்கோர்த்த ஓபிஎஸ்
author img

By

Published : Jul 25, 2023, 3:07 PM IST

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தக்கோரி, ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள வருவாய் மாவட்டங்களில் ஓபிஎஸ் அணியினர் போராட்டம் நடத்தவுள்ளனர். இதில் தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்வார் என அக்கட்சி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுகவின் மாநாடு மதுரையில் நடைபெறவுள்ள நிலையில் அதையொட்டிய ஓபிஎஸ் தரப்பினரின் ஆர்ப்பாட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கண்காணித்து வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு இல்லத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அறங்கேறின. கடந்த 6ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் 76 நாட்களுக்குள் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்தச் சம்பவம் நடைபெறும்போது துணை முதலமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ் என கேள்வியும் எழுப்பப்படுகிறது. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் தொடர்ந்து பின்னடவை சந்தித்த ஓபிஎஸ் தற்போது கோடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளார்.

கோடநாடு வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருக்குமா என்று குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த வழக்கை விரைவுபடுத்தக்கோரிக்கை வைக்கும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக எதிர்க்கலாம் என ஓபிஎஸ் தரப்பினர் நினைக்கின்றனர். இதில் டிடிவி தினகரனும் இணைந்துள்ளதால் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை மேலும் குறைக்கலாம் என நினைக்கின்றனர்.

கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓபிஎஸ்ஸிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் மூலம் ஓபிஎஸ்ஸை பாஜக முழுமையாக கைவிட்டது என பேச்சுக்கள் அடிபட்டன. இதற்கு, பாஜக தானாகவே முறித்து கொள்ளும் வரை கூட்டணி தொடரும் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி எளிமை அல்ல என்று கூறப்படுவதால், கூட்டணி கட்சிகளில் பாஜகவிற்கு அடுத்தபடியாக உள்ள கட்சியாக அதிமுக திகழ்கிறது.

இதனால், ஓபிஎஸ்ஸை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவோ, கட்சியில் இணைத்துக் கொள்ளவோ எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்க முடியாத சூழலில் பாஜக உள்ளது. ஆனால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரால் தென்மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பாதிக்கப்படும் என பாஜக நினைக்கிறது. ஆனால், அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பாஜகவிற்கு நம்பிக்கை அளிப்பதாக கூறப்படுகிறது. வரும் 28ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடக்க நிகழ்விற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஓபிஎஸ் புறக்கணிக்கப்படுவதால், அவரது தரப்பினர் பாஜகவின் மீதும் அண்ணாமலை மீதும் கோபத்தில் இருக்கின்றனர். ஆனால், ஓபிஎஸ் குறித்து பாஜக வட்டாரங்களில் விசாரிக்கும் போது, “ஓபிஎஸ் மிகவும் நல்லவர். ஓபிஎஸ் மீது பிரதமர் மோடி நல்ல மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார். ஆனால், அதிமுக கட்சி, சின்னம் உள்ளவர்களிடம் தான் தற்போது உள்ள சூழல் நிலையில் கூட்டணி அமைக்க முடியும். ஓபிஎஸ், டிடிவி தினகரனால் தென்மாவட்டங்களில் அதிமுக வாக்குகள் பிரியும் என்பது தெரியும். ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இயங்கும் அதிமுகவுடன்தான் கூட்டணி” எனக் கூறினார்கள்.

இந்த நிலையில்தான் கோடநாடு வழக்கை விரைவுபடுத்தக்கோரி ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஏற்கனவே திமுகவுடன் கைகோர்த்து செயல்படுகிறார் ஓபிஎஸ் என்று கூறினோம். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. மக்கள் பிரச்னைக்காக ஏன் போராட்டம் நடத்தவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமியை பழிவாங்க திமுகவுடன் ஓபிஎஸ் இணைந்துள்ளார். திமுக ஓபிஎஸ் கூட்டணியில் தற்போது டிடிவி தினகரனும் இணைந்துள்ளார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்” எனக் கூறினார்.

ஓபிஎஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்பது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய இரண்டு பேரும் அழைக்கப்படவில்லை. ஆர்ப்பாட்டத்தின் மூலமாக அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிசாமியின் வெற்றியை பாதிப்படையச் செய்யலாம். ஆர்ப்பாட்டத்தில் கூட்டத்தையெல்லாம் எளிதாக காட்டி விடுவார்கள். துவண்டு கிடக்கும் தனது தொண்டர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் உற்சாகத்தை ஏற்படுத்தும் என ஓபிஎஸ் நினைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லையில் அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.