தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக நிர்வாகிகள் பலர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் தூபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட பலரும் சென்றுள்ளனர். சிகாகோ விமான நிலையம் சென்ற துணை முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலாவதாக சிகாகோ நகரில் நடைபெறும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதனைத்தொடர்ந்து நாளை நடைபெறும் விழாவில் அவருக்கு 'International Rising Star Of the Year -Asia Award' விருது வழங்கப்படுகிறது.
12ஆம் தேதி நிறுவனங்கள் தொடர்பான வட்டமேசை கருத்தரங்கில் கலந்துகொள்கிறார். 13ஆம் தேதி வாஷிங்டன் செல்லும் ஓ. பன்னீர்செல்வம் 14ஆம் தேதி ஹீஸ்டன் நகரில் தமிழ் நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக தொழில் முனைவோர் மத்தியில் உரையாற்றுவார்.
அமெரிக்க பயணத்தில் கோட்டில் கலக்கும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்க்கு வாழ்துகள் குவிகின்றது