தமிழ்நாட்டில், மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுகாடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்மூலம் மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவியருக்கு 405 இடங்கள் கிடைத்தன.
இந்த 405 நபர்களில் 8 பேர் சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்தவர்கள்.
இந்த எட்டு பேரில், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் தலா இரண்டு நபர்களுக்கும் ஓமந்தூர் மருத்துவக் கல்லூரியில் மூன்று நபர்களுக்கும் மேலும் ஒருவருக்கு தேனி மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
மாநகராட்சி அரசு பள்ளியில் பயின்ற எட்டு மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டீன் மூலம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததற்கு ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் அரசாணை வெளியிடவில்லை என்றால் இந்த சாதனையை அந்த மாணவர்கள் செய்திருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
மாநகராட்சிப் பள்ளியில் படித்த 8 மாணவர்கள் 7.5 இட ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க வாய்ப்பு! - இட ஒதுக்கீடு
சென்னை: மாநகராட்சிப் பள்ளியில் படித்த 8 மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது.