ETV Bharat / state

காழ்ப்புணர்ச்சியால் எதிரணியினர் பொய் புகார் - ஜாகுவார் தங்கம் ஆணையரிடம் முறையீடு

சென்னை: தன் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் எதிரணியினர் பொய் புகார் கூறி வருவதாக தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜாகுவார் தங்கம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.

author img

By

Published : May 10, 2019, 6:05 PM IST

ஜாகுவார் தங்கம்

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவராக சண்டைப்பயிற்சி இயக்குநர் ஜாகுவார் தங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் 9 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் அந்தத் தேர்தலில் எதிரணியாக செயல்பட்ட திருக்கடல் உதயம், விஜயராகவ சக்கரவர்த்தி, சுரேஷ்குமார் உள்ளிட்ட சிலர் சங்கத்தை முடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஜாகுவார் தங்கம் காவல் ஆணையரிடம் முறையீடு

அவ்வாறு நேற்றிரவு அலுவலகத்தில் வேலை செய்து வந்த பணிப் பெண்களை சங்கத்தின் கட்டடத்துக்கு உள்ளே வைத்து பூட்டியுள்ளனர். மேலும் ஜாகுவார் தங்கம் ஆதரவாளர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர். இதை எதிர்த்து ஜாகுவார் தங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் எதிரணியினர் மீது புகார் அளித்துள்ளார்.

அதன்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையரிடம் முறையிட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு வழங்கக் கோரியும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Intro:

Body:Script sent in Mail

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.