ETV Bharat / state

மீன்வளத்துறை சார்பில் 8 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு! - சென்னை தலைமைச் செயலகம்

சென்னை: மீன்வளத்துறை சார்பில் 8 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

cm palanisamy
cm palanisamy
author img

By

Published : Feb 9, 2021, 7:25 PM IST

முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 3 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், பால்வளத் துறை சார்பில் காக்களூர் பால் பண்ணையில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை தீவனக் கிடங்கு மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடம், மீன்வளத் துறை சார்பில் 8 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் ஆகியவற்றை திறந்துவைத்தார்.

தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை கட்டடங்கள்

  • திண்டுக்கல்லில் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனை கட்டடம்;
  • வேலூரில் குடியாத்தம் வட்டம், கள்ளியூர் கிராமத்தில் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனைக் கட்டடம்.
  • திருப்பத்தூரில் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை கட்டடம்.
  • கள்ளக்குறிச்சியில் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை முதன்மை மருத்துவமனை கட்டடம்.
  • காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் , காக்களூர் பால் பண்ணையில் சுமார் 2,500 சதுர அடி பரப்பளவில் , 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை தீவனக் கிடங்கு மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடம்;
  • தேனி பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு அணை பகுதியில் அமைந்துள்ள மீன் விதை பண்ணையில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்குஞ்சு பொரிப்பகம் உள்ளிட்டவை திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் 2019-2020ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 2 கோடியே 40 லட்சத்து 64 ஆயிரத்து 222 ரூபாயில், ஏற்கனவே வழங்கப்பட்டது போக, மீதமுள்ள பங்கு ஈவுத் தொகையான 1 கோடியே 40 லட்சத்து 64 ஆயிரத்து 222 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை முதலமைச்சர் பழனிசாமி மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.

இதையும் படிங்க: சசிகலாவுக்கு அளித்த வரவேற்பை சூசகமாக விமர்சித்த ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.