ETV Bharat / state

மானியக்குழு அங்கீகாரத்துடன் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு பிஎட் பட்டப்படிப்பு - துணைவேந்தர் பார்த்தசாரதி - Vice chancellor parthasarathy pressmeet

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி குழு அனுமதியுடன் தொலை நிலைக் கல்வியில் இரண்டு ஆண்டுகள் பிஎட் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது என, துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்தார்.

press meet
சென்னை
author img

By

Published : Feb 23, 2021, 10:26 PM IST

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பார்த்தசாரதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி குழு அனுமதியுடன் இரண்டு ஆண்டுகள் பட்டப் படிப்பு தொலைநிலைக் கல்வியில் வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட 20 பிஎட் கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்புகளும், செய்முறை தேர்வும் நடத்தப்படும். ஆசிரியர்களுக்கான நேரடி பயிற்சி அவர்கள் விரும்பும் பள்ளியில் கல்வியியல் துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும். பிஎட் படிப்பிற்கான பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் பார்த்தசாரதி

மேலும் இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமாக 80 பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. அவற்றிற்கான அனைத்து பாடப் புத்தகங்களும் இ-புத்தகமாக மாற்றப்பட்டு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அதனை படித்து பயன் பெறலாம். இங்கு படிப்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் சேருவதில் எந்தவித சிக்கலும் இல்லை. இவர்களின் பட்டங்கள் செல்லும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்தப் படிப்பின் மீது எந்தவித அச்சமுமின்றி படிக்கலாம் .

மாணவர்களின் வேலைவாய்ப்புக்காக தனியார் நிறுவனங்களை கொண்டு வேலை வாய்ப்பு முகாமும் நடத்தப்படுகிறது. இங்கு அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற விரும்பினால், மறுதேர்வும் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம் குறித்து வழக்கு: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.