ETV Bharat / state

’தகுதியான வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் - eligible voters

உள்ளாட்சித் தேர்தலில் தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Oct 6, 2021, 6:25 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும், இதர மாவட்டங்களில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது.

அதன்படி, இரண்டு கட்ட தேர்தலாக நடத்தத் தமிழ்நாடு அரசு முடிவுசெய்து முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்.6) காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு நிறைவடைந்தது.

இதனிடையே விழுப்புரம் மாவட்டம் ஈச்சாங்குப்பம் கிராம பஞ்சாயத்துக்கான துணை வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதுடன் பள்ளி மாணவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழரசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், சக்திகுமார் அடங்கிய அமர்வில் இன்று (அக்.6) விசாரணைக்கு வந்தது. அப்போது ஈச்சாங்குப்பம் கிராம பஞ்சாயத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிவிட்டதால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனத் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் ஆவணங்களைச் சரிபார்த்து தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: சவ்வரிசி கலப்படம்: அறிக்கைத் தாக்கல்செய்ய உணவுத் துறைக்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.