ETV Bharat / state

ஆன்லைனில் இலவச மருத்துவ ஆலோசனை; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் புதிய அறிவிப்பு!

author img

By

Published : Aug 17, 2023, 10:55 PM IST

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெறும் சேவையை தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், முதியோர் மருத்துவம் உட்பட பல சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனையை இணையதளம் மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் வெளியிட்டுள்ள தகவலில், "உலகளவில் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் வாழும் மக்கள், வயதானவர்கள், நடமாடுவதில் சிரமம் உள்ளவர்கள், பொருளாதார சுமை உள்ளவர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனை பெறுவதில் பல சிரமங்கள் உள்ளன" என்று தெரிவித்தார்.

மேலும் தற்போதைய நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி காலக்கட்டத்தில் தொலை மருத்துவம் என்பது தொலைத்தொடர்பு இணைப்புகள் மூலம், வீட்டில் இருந்தபடியே சிறப்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவதற்கு இத்தகைய மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இது சுகாதார சேவைகளை பயணிகள் வீட்டிற்கே எடுத்துச் செல்லும் முறையாகும் என்றும், இந்த சேவை நோயாளிகளுக்கு தங்கள் வீட்டிலேயே கிடைக்கும் சுகாதார சேவை என்றும், மேலும் இதில் பங்குபெறும் மருத்துவர்களின் சேவை அங்கீகரிக்கப்பட்டது என்றும் ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, "கோவிட் பேரிடர் காலத்தில் தொலை மருத்துவத்தின் மகத்துவத்தை இந்த உலகம் அறிந்தது. சிறப்பு மருத்துவ ஆலோசனை தேவைப்படும் கிராமப்புற மற்றும் நகப்புற பகுதிகளில் இருக்கும் வயதானவர்கள் மற்றும் பயணம் செய்ய இயலாதவர்களுக்கு தொலை மருத்துவம் சிறந்ததாக அமைகிறது" என்று கூறினார்.

இதை கருத்தில் கொண்டு ராஜூவ் காந்தி அரசு பொது மருத்துவனையில் 'தொலை மருத்துவம்' எனப்படும் இணையவழி மருத்துவ சேவை மக்களுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்ததாகவும், இந்த சேவையை திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், முதியோர் நல மருத்துவம் மற்றும் தோல் நோய் மருத்துவம் ஆகிய துறைகளை சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்குவதாகவும், இச்சேவைகளை பெறுவதற்கு https://teleconsultation.s10safecare.com என்ற இணைப்பில் தொடர்பு காெள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.

மருத்துவ சேவை நேரங்கள்:

  • பொது மருத்துவம் - திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 முதல் 10 மணி வரை.
  • பொது அறுவை சிகிச்சை மருத்துவம் - திங்கள் முதல் வியாழன் வரை காலை 10 முதல் 11 மணி வரை.
  • குழந்தை நல மருத்துவம் - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் 11 மணி வரை.
  • முதியோர் நோய் மருத்துவம் - புதன் முதல் சனிக்கிழமை வரை காலை 10 முதல் 11 மணி வரை.
  • மகப்பேறு மருத்துவம் - செவ்வாய், வியாழன், சனிக்கிழமை மட்டும் காலை 11 மணி முதல் 12 மணி வரை.
  • தோல் நாேய் மருத்துவம் - திங்கள், புதன், வெள்ளி மட்டும் காலை 11 மணி முதல் 12 மணி வரை.

இதையும் படிங்க: மாரடைப்பு யாருக்கெல்லாம் வரும்.? ட்ரோபோனின் ரத்த பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.