ETV Bharat / state

உயிருக்கு உலை வைக்கும் ஆன்லைன் சூதாட்டம்: "மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது வருத்தம்" - மருத்துவர் வேதனை

author img

By

Published : Mar 10, 2023, 9:20 PM IST

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வரும் சூழலில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது வேதனை அளிப்பதாக மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் வேதனை
மருத்துவர் வேதனை

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து பலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற விளையாட்டுக்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

மருத்துவர் வேதனை

பரிந்துரைகளை அளிக்க குழு: இதுதொடர்பாக பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்னேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே, சட்டத்துறை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் இடம்பெற்றனர். இக்குழுவினர் பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டனர். பின்னர் பல்வேறு தரவுகளின் அடிப்படையிலும், பிற மாநிலங்களில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்தும், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு, அரசுக்கு 2022 ஜூன் மாதம் 27ம் தேதி பரிந்துரைகளை அளித்தது.

அவசர சட்டத்துக்கு ஒப்புதல்: அதன்பிறகு பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித்துறை மூலம் கணக்கெடுப்பு, பொதுமக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு

26. 9.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் ஆளுநருக்கு அனுப்பி வைத்து அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒப்புதல் வழங்கினார்.

மசோதா நிறைவேற்றம்: இதைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். அந்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி 8 கேள்விகளை அரசிடம் விளக்கமாக கேட்டிருந்தார். அதற்கும் அரசு விளக்கம் அளித்தது.

திருப்பி அனுப்பப்பட்ட மசோதா: இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான மசோதாவை ஆளுநர் ரவி கடந்த 8ம் தேதி அரசுக்கு மீண்டும் திருப்பி அனுப்பி உள்ளார். ஆன்லைன் உள்ளிட்ட விளையாட்டுகளில் ரேண்டம் எண் தான் முக்கியப் பங்கினை வகிக்கிறது. கம்ப்யூட்டர் மூலம் விளையாடும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் தான் யாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்கிறது. விளையாடும் போது ஒரு திறமை உள்ளவர் எதிர்புறத்தில் இருப்பதில்லை. இதனால் மற்றவரை எளிதில் அவர் வெற்றி கொள்ள முடியும். நேரடியாக விளையாடும் போது திறனை வளர்க்க முடியும். ஆனால் ஆன்லைன் மூலம் விளையாடும் போது ஏமாற்றப்படுவார்கள் என்பது கம்ப்யூட்டர் வல்லுநர்களின் வாதம்.

'தடுத்து நிறுத்தப்பட வேண்டும்': இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டம் குறித்த அவசர சட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினரும், ஸ்னேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார் கூறும்போது, "ஆன்லைன் விளையாட்டால் அந்த தனி நபர் மட்டும் பாதிக்காமல் அவர் சார்ந்த குடும்பம், சமூகம் பாதிக்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடி கடிதம் எழுதி வைத்து விட்டு 45 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் நமக்கு கணக்கு தெரியாதவர்கள் எவ்வளவோ பேர் இருக்கலாம். இது பெரிய சமூகப் பிரச்னையாக இருப்பதால் நிச்சயம் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆன்லைன் கார்டு அல்லது காசு வைத்து ஆடும் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும். விளையாடும் போது விளையாட்டாக இருக்கும் ,அதுவே பணம் வைத்து விளையாடும் போது சூதாட்டமாக மாறிவிடும். எனவே சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். இதனை தடுக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. தடுக்க முடியாதது இல்லை. பப்ஜி, டிக்டிக் போன்ற விளையாட்டுக்களை தடுத்தது போல் இந்த விளையாட்டையும் தடுக்க சட்டமும், வழிவகைகளும் இருக்கிறது.

நீதிமன்றம் நிராகரித்ததற்கு காரணம் திறமையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதை நிறுத்தக் கூடாது என்பதற்கு சட்டம் இருக்கிறது. நேரடியாக சூதாட்டம் விளையாடும் போது கையில் வருவது ரேண்டம். ஆனால் ஆன்லைன் மூலம் விளையாடும் போது நிறுவனம் தான் ரேண்டம் எண்ணை அளிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவர்கள் தான் உங்களுக்கு எந்த சீட் வர வேண்டும் என்பதை நிர்ணயிக்கின்றனர். அதனால் நிச்சயமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தான் சாதகமாக இருக்கும்" என கூறினார்.

'வருத்தமாக உணர்கிறேன்': தொடர்ந்து பேசிய மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார், "ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடும் கார்டு கேம்களை நிறுத்த வேண்டும் என பரிந்துரை செய்தோம். இதனை தடுக்க எல்லோருடன் கலந்து ஆலோசித்து தீர்வு காண வேண்டும் என கூறியிருந்தோம். ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது வருந்தத்தக்கதாக பார்க்கிறேன். உயிரிழந்த பின்னரும், தடை செய்ய வேண்டும் என நிறைய பேர் கூறிய பிறகும், மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது வருந்தத்தக்கது.

கேம்லிங் நிறுவனம் லாப நோக்கத்துடன் செயல்படுவதால் அவர்கள் அதற்காக திறன் வளர்க்கும் விளையாட்டு என கூறுவார்கள். ஆனால் பொதுமக்களை பாதிக்கிறது. வாரத்தில் 3 பேர் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மனத்தோல்வியுடன் வருகின்றனர். வீட்டில் உள்ள பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை பொது மக்களின் நலனை கருதி தடைச் செய்ய வேண்டும். ஆன்லைன் விளையாட்டு பழகுவதற்கு மிகவும் எளிது, அதில் இருந்து மீண்டு வருவது மதுவிற்கு அடிமையானவர்கள் மீண்டு வருவதை விட கடினமாக இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: ‘அரசியலமைப்புச் சட்டம் 200’ஐ ஆளுநர் படிக்க வேண்டும் - சபாநாயகர் அப்பாவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.