ETV Bharat / state

Online Rummy: சந்தேகம் தீர்ந்ததும் ஒப்புதல்..! ஆளுநரை சந்தித்த பிறகு அமைச்சர் தகவல்!

தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவில் சில சந்தேகங்கள் உள்ளதாகவும், அதனை தெளிவுப்படுத்திக்கொண்டு ஒப்புதல் வழங்குவதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்; ஆளுநரை சந்தித்து சட்டத்துறை அமைச்சர் விளக்கம்..

author img

By

Published : Dec 1, 2022, 2:06 PM IST

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதில் அளித்தது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உள்துறை செயலாளர் பணிந்தர ரெட்டி, சட்டத்துறை செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் சந்தித்தனர்.

அரைமணி நேர சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறும்போது,”ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதா குறித்து ஆளுநரிடத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தில் மக்கள் பணம் கட்டி விளையாடுவதால் அவர்கள் பணம் பறிபோவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநரிடம் தெரிவித்தோம்.

சட்டத்தில் சில சந்தேகங்கள் உள்ளது, அதனை தெளிவுப்படுத்திக்கொண்டு ஒப்புதல் வழங்குவதாக ஆளுநர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 21 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால நிர்ணயம் ஏதும் இல்லாததால் அதுகுறித்து கேள்வி எழுப்ப முடியாது”என்றார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்; ஆளுநரை சந்தித்து சட்டத்துறை அமைச்சர் விளக்கம்..

அவசர சட்டத்துக்கு ஏன் அரசாணை பிறப்பிக்கவில்லை என கேட்டதற்கு, அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அதனை அரசிதழில் வெளியிடப்பட்டதாகவும், அவசர சட்டத்திற்கான விதிகளை உருவாக்குவதற்கு பல்வேறு குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் அதற்குள் சட்டப்பேரவை கூட்டத்துடன் கூடிய தேதி அறிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவை கூடுவது தொடர்பான அறிவிப்பு வந்ததால் அரசாணை பிறப்பிக்கவில்லை எனவும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டத்திற்கு அனுமதி கிடைத்தவுடன் குழுக்கள் அமைப்புக்கு விதிகளை அறிவிக்கலாம் என முடிவெடுத்து விதிகள் வகுக்கப்படவில்லை என தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் தடைக்கான அவசர சட்டம் காலாவதியாகிவிட்டது. இருக்க கூடிய தடை சட்டங்கள் வாயிலாக ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம். தமிழ்நாடு ஆளுநருக்கு இந்த சட்டத்தின் மீது இன்னும் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், சந்தேகங்கள் தெளிவானதும் ஒப்புதல் அளிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார் என கூறினார்.

இதையும் படிங்க: டிச.5 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.