இதுகுறித்து உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர ஜூலை 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை விண்ணப்பங்களை www.tngasa.in, www.tndceonline.org என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். சான்றிதழ்களை ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை பதிவேற்றம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044 22351014 மற்றும் 044 22351015 என்ற எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
கரோனா நோய் தொற்றினை தவிர்க்கும் பொருட்டு அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020 - 21 ஆம் கல்வி ஆண்டிற்கு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு ஜூலை 20ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.