ETV Bharat / state

ஆருத்ரா கோல்டு நிறுவன வழக்கில் மேலும் ஒரு இயக்குநர் கைது! - Aarudhra Gold company

ரூ.2400 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு நிறுவன வழக்கில், மேலும் ஒரு இயக்குநர் கைது செய்யப்பட்டார். துபாய்க்கு தப்பிச்செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.

ஆருத்ரா கோல்டு
ஆருத்ரா கோல்டு நிறுவன வழக்கில் மேலும் ஒரு இயக்குனர் கைது
author img

By

Published : Mar 29, 2023, 4:37 PM IST

சென்னை: அதிக வட்டி தருவதாகக் கூறி ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் நிறுவனம் சுமார் ரூபாய் 2438 கோடி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

குறிப்பாக இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன் பாபு செந்தில்குமார், நாகராஜ், மேனேஜர்கள் பேச்சிமுத்து ராஜா, ஐயப்பன், ஏஜென்ட் ரூசோ சந்திரசேகர் ஆகிய எட்டு பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் இயக்குநரில் ஒருவரும் பாஜக பிரமுகரான ஹரிஷ் மற்றும் மாலதி ஆகியோரை சமீபத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்நிறுவனத்தின் மேனேஜிங் இயக்குநர் ராஜசேகர், உஷா ராஜசேகர் மற்றும் மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று உள்ளதால் அவர்களை பிடிக்க ’ரெட் கார்னர் நோட்டீஸ்’ மற்றும் ’லுக் அவுட் நோட்டீஸ்’ பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் இதுவரை ரொக்கமாக ரூ5.69 கோடியும், ரூ1.13 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் ஏஜென்டுகளின் வங்கிக் கணக்கு இருப்பில் இருந்த ரூ.96 கோடி முடக்கப்பட்டு, 97 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் இயக்குநரும் பாஜக பிரமுகருமான ஹரிஷ் மற்றும் ஏஜென்ட் மாலதி ஆகியோரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆருத்ரா நிறுவனங்களில் ஒருவரான மைக்கேல் ராஜ், துபாய் நாட்டிற்கு தப்பிச் செல்லும் போது விமான நிலையத்தில் போலீசாரால் பிடிபட்டுள்ளார்.

one-more-director-arrested-in-aarudhra-gold-company-case
ஆருத்ரா கோல்டு நிறுவன வழக்கில் மேலும் ஒரு இயக்குநர் கைது

இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் மைக்கேல் ராஜாவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில் இயக்குநர் மைக்கேல் ராஜ் மோசடி செய்தபின்பு துபாயில் தலைமறைவாக இருந்ததும், சென்னைக்கு வந்து மீண்டும் துபாய்க்கு தப்பிச்செல்லும் போது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. ஆருத்ரா நிறுவனத்தில் மோசடி செய்த பணத்தில் மைக்கேல் ராஜ் எங்கெல்லாம் சொத்துகளைக் குவித்துள்ளார்? வெளிநாட்டில் நிறுவனம் தொடங்கி மோசடி செய்துள்ளாரா என்பது தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

இதையும் படிங்க: Cognizant Technology கட்டுமானத்திற்கு ரூ.12 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம்; அதிமுக அமைச்சர் லஞ்சம் பெற்றாரா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.