ETV Bharat / state

வருகிற 20ஆம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம்! - kalaingar kottam

வருகிற 20ஆம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்

author img

By

Published : May 12, 2023, 5:38 PM IST

சென்னை: வருகிற 20ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகின்ற 20.5.2023 தேதியன்று சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் இதில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பொதுக்கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இந்த பொதுகூட்டத்தைத் தொடர்ந்து வருகின்ற ஜூன் 3ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் கோட்டம் திறப்பு விழா குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.. துள்ளாத தலைவன்.. எடப்பாடியை வெளுத்து வாங்கிய வைத்திலிங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.