ETV Bharat / state

விமானத்துக்குப் போட்டிப் போடும் ஆம்னி பேருந்து கட்டணம்.. பயணிகள் அவதி..!

Private Omni Bus fare: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்துக்குப் போட்டிப் போடும் ஆம்னி பேருந்து கட்டணம்.. பயணிகள் அவதி..!
விமானத்துக்குப் போட்டிப் போடும் ஆம்னி பேருந்து கட்டணம்.. பயணிகள் அவதி..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 10:51 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகை வரும் ஜன.15 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல பயணிகள் தயாராகி வரும் நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பயணிகளை மலைக்கச் செய்துள்ளது. இதனையடுத்து பண்டிகை காலங்களையும், விடுமுறை நாட்களையும் குறிவைத்து, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகள் அதன் இயல்பு கட்டணத்தில் இருந்து, மூன்று மடங்காக அதாவது இயல்பான நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை விட 50 முதல் 80 சதவீதம் வரை உயர்த்தி பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்துக்குப் போட்டிப் போடும் ஆம்னி பேருந்து கட்டணம்.. பயணிகள் அவதி..!
விமானத்துக்குப் போட்டிப் போடும் ஆம்னி பேருந்து கட்டணம்.. பயணிகள் அவதி..!
வ.எண் இடம்முந்தைய கட்டணம்தற்போதைய கட்டணம்
Non -AC AC Non -AC AC
1சென்னை- நாகர்கோவில் 600 1533 2400 3699
2சென்னை - தூத்துக்குடி 600 1210 2300 2950
3சென்னை - திருநெல்வேலி 700 1140 2200 4040
4சென்னை - மதுரை 500 900 1950 2800
5சென்னை - தேனி 700 1100 2100 2990
6சென்னை - திருச்சி 649 900 1659 3600
7சென்னை - சேலம் 500 960 2100 2399
8சென்னை - கோயம்புத்தூர் 550 941 1900 2700
9சென்னை - திருப்பூர் 500 900 1800 2700
10சென்னை - தஞ்சாவூர் 570 750 1099 2399
11சென்னை - ஈரோடு 600 1014 1700 2500
12சென்னை - தருமபுரி 600 650 1550 2400

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைநகர் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக என்னதான் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகளை அறிவித்திருந்தாலும், போக்குவரத்துத் துறையின் திடீர் போராட்டங்களால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. பண்டிகை காலம் என்பதனால் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் போராட்டம், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இடையூற்றை ஏற்படுத்தும் என்பதனால், மீண்டும் அமைச்சர் சிவசங்கர் மற்றும் போக்குவரத்துத் துறையினர், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையிலும் சுமுக தீர்வு கிடைக்காததால், குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் தற்போது தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பெரும்பாலும் ஆம்னி பேருந்துகளையே பொதுமக்கள் நம்பி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, ஆம்னி பேருந்துகளில் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணத்தாலும் தனியார் பேருந்து கட்டணங்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதினால் அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்டிகை விடுமுறைக்குச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.