சென்னை: அரசு மருத்துவமனைகளில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பெறப்படும் பல வகையான மாத்திரைகளை மொத்தமாக நோயாளர்களுக்கு கையில் வழங்குவார்கள். அப்போது அதிகளவில் மாத்திரைகளை பெற்றுச் செல்லும் நோயாளர்கள் சிலர் மருந்துகளை தவற விடுதல், எந்த நேரத்தில் எந்த மாத்திரையை சாப்பிடுவது என்பது தெரியாமல் விட்டுவிடுவர்.
இதனைத் தவிர்க்க அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தனியார் மருந்து கடைகள் போன்று மாத்திரைகளை காகித உறைகளில் காலை, மதியம், இரவு என குறித்து அளிக்கப்படுகிறது.
மேலும் பாராபின் போன்ற திரவ மருந்துகளை அளிக்க பாட்டில்களை நோயாளர் கொண்டு வர வேண்டி இருந்தது. இதற்காக மருந்து குப்பிகளை மருத்துவமனையே வழங்குகிறது. இதனை பெற்ற நோயாளிகள் சிறந்த திட்டம் எனக் கூறி செல்கின்றனர்.
இதையும் படிங்க: 10, 11, 12 பொதுத்தேர்வுக்கு டிச.26 முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!