சென்னை அயனாவரம் பகுதியைச்சேர்ந்தவர், 57 வயது மூதாட்டி. இவர் அப்பகுதியிலுள்ள கோயில் அருகே பிளாட்பார்ம் பகுதியில் தங்கி வருகிறார். கணவரை பிரிந்து கடந்த ஆறு வருடங்களாக வாழ்ந்து வரும் இவர் கோயில் அருகே பூ கட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 3ஆம் தேதி மாலை அயனாவரம் பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தபோது, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர் கரிகாலன் என்பவர் அவ்வழியே நடந்து வந்த முதாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் தவறான உறவுக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி, கரிகாலன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார். இதில் தடுமாறிய கரிகாலன் பின்னர், கோபத்தின் உச்சிக்குச்சென்று கீழே கிடந்த கல்லை எடுத்து பாட்டியின் தலையில் பலமாக தாக்கியிருக்கிறார். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட கரிகாலனை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து விசாரணை நடத்திய டி.பி. சத்திரம் போலீசார் பெண்ணை மானபங்கப்படுத்துதல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கரிகாலனை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கேன்டீன் உணவில் எலி..! என்எல்சி தொழிலாளர்கள் வாந்தி, மயக்கம்!